பெருங்காயத்தின் ஊட்டச்சத்து பற்றி பேசுகையில், இந்த சக்தி வாய்ந்த
மசாலாப் பொருளில் நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து,
நியாசின், கரோட்டின் மற்றும் ரிபோஃப்ளேவின் ஆகியவை அடங்கியுள்ளது. அதோடு
இதில் ஆன்டி-வைரல், ஆன்டி-பாக்டீரியல் பண்புகளையும் கொண்டுள்ளதால்,
நிவாரணப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்த மசாலாவில்
ஆன்டிகோகுலண்ட் பண்புகள் உள்ளன மற்றும் இது ஒரு நீர்ப்பெருக்கியும் கூட.
இப்படி பல அற்புதமான நன்மைகளைக் கொண்டுள்ளதால், ஆயுர்வேதத்தில் இது ஒரு
முக்கிய மருத்துவ பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
செரிமான பிரச்சனை நீங்கும் :-
பெருங்காயத் தூளை நீரில் கலந்து குடிப்பதால், அதில் உள்ள அழற்சி எதிர்ப்பு
பண்புகள், மற்றும் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு பொருட்கள் செரிமானம் தொடர்பான
பிரச்சனைகள் மற்றும் அசிடிட்டியைத் தடுக்க உதவுகின்றன.
எலும்புகள் வலுபெறும்
நீரில் பெருங்காயத்தைக் கலந்து தினமும் குடிப்பது, எலும்புகளை வலிமையாக்க
உதவுகின்றன. பெருங்காயத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ஆரோக்கியமான
பற்கள் மற்றும் வலுவான எலும்புகளுக்கு வழிவகுக்கின்றன.
இரத்த சோகையை எதிர்க்கும்
பெருங்காயத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலில் இரத்த சோகைக்கு எதிரான
ஒரு பாதுகாப்பு வளையத்தை அமைக்க உதவுகின்றன. மேலும் இதில் உள்ள
ஆன்டி-கார்சினோஜெனிக் பொருட்கள், புற்றுநோயைத் தடுக்கின்றன.
சர்க்கரை நோய்க்கு நல்லது
மஞ்சள் நிற பெருங்காயத் தூளை நீரில் கலந்து குடிக்கும் போது, இரத்த
அழுத்தம் சீராகிறது. அதோடு இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக்
கட்டுப்படுத்தி, சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்கிறது.
ஆஸ்துமா
ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்கள், பெருங்காயத் தூளை சுடுநீரில் கலந்து
குடித்தால், அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், ஆஸ்துமாவைத் தூண்டும்
பாக்டீரியாக்களை அழித்து, ஆஸ்துமாவைத் தடுக்கும்.
கண்களுக்கு நல்லது
பெருங்காயத்தில் பீட்டா-கரோட்டின் உள்ளது. இது கண்களின் ஆரோக்கியத்தைப்
பராமரிக்க உதவுவதோடு, கண்கள் வறட்சியடைவதையும் தடுக்கின்றன. நீங்கள் கணினி
முன் அதிக நேரம் செலவிடுபவராயின், தினமும் நீரில் பெருங்காயத் தூளை கலந்து
குடியுங்கள்.
சுவாச கோளாறுகளைக் கட்டுப்படுத்தும்
பெருங்காயத் தூளை ஒருவர் தினமும் சுடுநீரில் கலந்து குடிப்பதன் மூலம்,
சுவாசக் கோளாறுகளை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும். முக்கியமாக
குளிர்காலத்தில் அடிக்கடி சளி பிடிக்காமல் இருக்க, பெருங்காயத்தை நீரில்
கலந்து குடிப்பது நல்ல பாதுகாப்பை வழங்கும்.
வலி நிவாரணி
பெருங்காயத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வலி நிவாரண பண்புகள்
உள்ளதால், உடல் வலியில் இருந்து மட்டுமின்றி, தலைவலி, ஒற்றைத் தலைவலியில்
இருந்தும் நல்ல நிவாரணத்தை அளிக்கும்.
மன அழுத்த நிவாரணி
உங்கள் மனநிலையில் அடிக்கடி ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு, நீங்கள் மன அழுத்தம்
அல்லது மனச் சோர்வை உணர்ந்தால், பெருங்காயத் தூளை சுடுநீரில் கலந்து
குடியுங்கள். இதனால் அதில் உள்ள மன இறுக்க நிவாரண பண்புகள், நல்ல
மனநிலையைப் பெற உதவி, மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும்.










