Wednesday, August 13, 2014

JK

திருமண நட்சத்திர பொருத்தம்

திருமண நட்சத்திர பொருத்தம் - ஆண்களுக்கு
வ.எண்
ஆண் நட்சத்திரத்திற்கு
பொருத்தமான பெண் நட்சத்திரங்கள்
1.
அஸ்வனி பரணி, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம்
2.
பரணி ரோகிணி, சுவாதி, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அஸ்வனி
3.
கார்த்திகை 1 ம் பாதம் சித்திரை 3, 4, அவிட்டம் 1, 2
4.
கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்கள் அஸ்தம், சித்திரை 1, 2, கேட்டை, அவிட்டம் 3, 4
5.
ரோகிணி மிருகசீரிஷம் 1, 2, உத்திரம், அனுஷம், உத்திரட்டாதி
6.
மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள் புனர்பூசம் 4, அஸ்தம், பூரட்டாதி, ரேவதி, ரோகிணி
7.
மிருகசீரிஷம் 3, 4 ம் பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம், அஸ்தம், சுவாதி, பூரட்டாதி 4, ரேவதி
8.
திருவாதிரை பூசம், உத்திராடம் 1, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4
9.
புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்கள் பூசம், சுவாதி, பூராடம், உத்திரட்டாதி, ரேவதி
10.
புனர்பூசம் 4 ம் பாதம் பூசம், அனுஷம், பரணி, ரோகிணி
11.
பூசம் உத்திரம், அஸ்வனி, புனர்பூசம் 4
12.
ஆயில்யம் அஸ்தம், அனுஷம், பூசம்
13.
மகம் சித்திரை, அவிட்டம் 3, 4
14.
பூரம் உத்திரம், அஸ்தம், சுவாதி, உத்திராடம் 1, திருவோணம்
15.
உத்திரம் 1 ம் பாதம் பூராடம், ரோகிணி, மிருகசீரிஷம், பூரம்
16.
உத்திரம் 2, 3, 4 ம் பாதங்கள் பூராடம், திருவோணம், ரேவதி
17.
அஸ்தம் உத்திராடம், உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4
18.
சித்திரை 1, 2 ம் பாதங்கள் விசாகம் 4, திருவோணம், ஆயில்யம்
19.
சித்திரை 3, 4 ம் பாதங்கள் விசாகம், திருவோணம், சதயம், ஆயில்யம்
20.
சுவாதி அனுஷம், பூரட்டாதி 1, 2, 3, புனர்பூசம் 4, பூசம்
21.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள் சதயம், ஆயில்யம்
22.
விசாகம் 4 ம் பாதம் சதயம்
23.
அனுஷம் உத்திராடம் 2, 3, 4, பூரட்டாதி, ரேவதி, உத்திரம்
24.
கேட்டை திருவோணம், அனுஷம்
25.
மூலம் அவிட்டம், கார்த்திகை 1, மிருகசீரிஷம் 3, 4
26.
பூராடம் உத்திராடம், திருவோணம், அஸ்வனி, திருவாதிரை, சுவாதி, உத்திரம் 2-3-4, அஸ்தம்
27.
உத்திராடம் 1 ம் பாதம் பரணி, மிருகசீரிஷம் 3, 4, அஸ்தம், பூராடம்
28.
உத்திராடம் 2, 3, 4 ம் பாதங்கள் பரணி, மிருகசீரிஷம் 1, 2
29.
திருவோணம் உத்திரட்டாதி, அஸ்வனி, மிருகசீரிஷம் 1, 2, அனுஷம்
30.
அவிட்டம் 1, 2 ம் பாதங்கள் புனர்பூசம் 4, ஆயில்யம், சுவாதி, விசாகம், திருவோணம்
31.
அவிட்டம் 3, 4 ம் பாதங்கள் சதயம், புனர்பூசம் 1, 2, 3, விசாகம் 4
32.
சதயம் கார்த்திகை, மிருகசீரிஷம், மகம், விசாகம் 4, அனுஷம், அவிட்டம் 3, 4
33.
பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்கள் உத்திரட்டாதி, ரோகிணி, பூரம், அனுஷம், பூராடம்
34.
பூரட்டாதி 4 ம் பாதம் உத்திரட்டாதி, பூராடம், திருவோணம், ரோகிணி, பூசம்
35.
உத்திரட்டாதி ரேவதி, புனர்பூசம், உத்திரம் 2, 3, 4, உத்திராடம், பூரட்டாதி 4
36.
ரேவதி பரணி, பூசம், அஸ்தம், பூராடம், உத்திரட்டாதி


திருமண நட்சத்திர பொருத்தம் - பெண்களுக்கு
வ.எண்
பெண் நட்சத்திரத்திற்கு
பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்
1.
அஸ்வனி பரணி, திருவாதிரை, பூசம், பூராடம், திருவோணம், சதயம்
2.
பரணி புனர்பூசம், உத்திராடம், ரேவதி, அஸ்வனி
3.
கார்த்திகை 1 ம் பாதம் சதயம்
4.
கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்கள் சதயம்
5.
ரோகிணி மிருகசீரிஷம் 1, 2, புனர்பூசம் 4, உத்திரம் 1, பூரட்டாதி, பரணி
6.
மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள் உத்திரம் 1, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், சதயம், அஸ்வனி, ரோகிணி
7.
மிருகசீரிஷம் 3, 4 ம் பாதங்கள் திருவாதிரை, உத்திரம், அஸ்தம், மூலம், உத்திராடம் 2, 3, 4, சதயம், பரணி
8.
திருவாதிரை பூரம், பூராடம், பரணி, மிருகசீரிஷம் 3, 4
9.
புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்கள் அவிட்டம் 3, 4, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4
10.
புனர்பூசம் 4 ம் பாதம் பூசம், சுவாதி, அவிட்டம் 1, 2, உத்திரட்டாதி, மிருகசீரிஷம்
11.
பூசம் ஆயில்யம், அஸ்தம், சுவாதி, விசாகம் 1-2-3, பூரட்டாதி 4, ரேவதி, திருவாதிரை, புனர்பூசம்
12.
ஆயில்யம் சித்திரை, அவிட்டம் 1, 2
13.
மகம் சதயம்
14.
பூரம் உத்திரம் 1, பூரட்டாதி 1, 2, 3, அஸ்வனி
15.
உத்திரம் 1 ம் பாதம் சுவாதி, அனுஷம், பரணி, ரோகிணி, பூசம், பூரம்
16.
உத்திரம் 2, 3, 4 ம் பாதங்கள் அனுஷம், பூராடம், ரோகிணி, பூசம், பூரம்
17.
அஸ்தம் பூராடம், உத்திராடம் 1, ரேவதி, மிருகசீரிஷம், பூரம், ஆயில்யம், கார்த்திகை 2, 3, 4
18.
சித்திரை 1, 2 ம் பாதங்கள் கார்த்திகை 2, 3, 4, மகம்
19.
சித்திரை 3, 4 ம் பாதங்கள் கார்த்திகை 1, மகம்
20.
சுவாதி பூராடம், அவிட்டம் 1, 2, பரணி, மிருகசீரிஷம் 3, 4, பூரம், புனர்பூசம்
21.
விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள் அவிட்டம் 1, 2, சித்திரை 3, 4
22.
விசாகம் 4 ம் பாதம் அவிட்டம், சதயம், சித்திரை
23.
அனுஷம் கேட்டை, சதயம், பூரட்டாதி 1, 2, 3, ரோகிணி, புனர்பூசம், ஆயில்யம், அஸ்தம், சுவாதி
24.
கேட்டை கார்த்திகை 2, 3, 4
25.
மூலம் உத்திரட்டாதி, பூரம், சுவாதி, பூராடம்
26.
பூராடம் பூரட்டாதி, புனர்பூசம் 1, 2, 3, உத்திரம், ரேவதி
27.
உத்திராடம் 1 ம் பாதம் உத்திரட்டாதி, திருவாதிரை, பூரம், பூராடம், அஸ்தம், சுவாதி
28.
உத்திராடம் 2, 3, 4 ம் பாதங்கள் உத்திரட்டாதி, பரணி, பூசம், அஸ்தம், அனுஷம், பூராடம்
29.
திருவோணம் அவிட்டம் 1, 2, பூரட்டாதி 4, பரணி, புனர்பூசம் 4, உத்திரம் 2, 3, 4, சித்திரை, கேட்டை, பூராடம்
30.
அவிட்டம் 1, 2 ம் பாதங்கள் கார்த்திகை 1, மூலம்
31.
அவிட்டம் 3, 4 ம் பாதங்கள் கார்த்திகை, சதயம், மகம், மூலம்
32.
சதயம் சித்திரை 3, 4, விசாகம், அவிட்டம் 3, 4
33.
பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்கள் மிருகசீரிஷம் 1, 2, சுவாதி, அனுஷம்
34.
பூரட்டாதி 4 ம் பாதம் உத்திரட்டாதி, மிருகசீரிஷம், அனுஷம்
35.
உத்திரட்டாதி ரேவதி, திருவாதிரை, ரோகிணி, புனர்பூசம் 1, 2, 3, அஸ்தம், திருவோணம், பூரட்டாதி
36.
ரேவதி மிருகசீரிஷம், புனர்பூசம் 1, 2, 3, உத்திரம் 2, 3, 4, அனுஷம், உத்திரட்டாதி

பத்து பொருத்தம்
1 (a) நக்ஷத்திரம் பொருத்தம் அல்லது தினப் பொருத்தம் :-
பெண்ணினுடைய நாள் முதல் புருஷனுடைய நாள் வரையில் எண்ணும் போது 2-4-6-8-9-11-13-15-18-20-24-26ம் நக்ஷத்திரங்கள் உத்தமம் .12-வது நக்ஷத்திரத்தில் 1-ம் பாதமும்,14-ம் நக்ஷத்திரத்தில் 4-ம் பாதமும்,16-ம் நக்ஷத்திரத்தில் 3-ம் பாதமும் நீக்கி நீன்ற மற்ற பாதங்கள் மத்திமம் .இதில் சொல்லபடாதவையும் அஷ்டம ராசி நக்ஷத்திரங்களும் பொருந்தா.
(b).ஏக நக்ஷத்திரப் பொருத்தம் அல்லது ஏக தினப் பொருத்தம்:-
ரோகிணி,திருவாதிரை,பூசம்,மகம்,அஸ்தம்,திருவோணம் இவை 6-ம் ஷ்தீரீ புருஷர்களுக்கும் ஒரே நக்ஷத்திரமனால் உத்தமம்.மற்றவை பொருந்தா.அசுவனி,கிருத்திகை,புனர்பூசம்,உத்திரம் சித்திரை,அனுஷம்,உத்திராடம் இவை 8ம் மத்திமம் ஷ்தீரீ புருஷர்களுக்கு ஒரே ராசியானால் புருஷன் நக்ஷத்திரம் முந்தினதும் சுபம்,மற்றவை பொருந்தா.
2 கணப் பொருத்தம்:-
ஸ்திரீ புருஷர்களுக்கும் ஒரே கணமானாலும் ,ஸ்திரீ மனுஷ கணமும்,புருஷன் தேவ கணமானாலும் உத்தமம்.ஸ்திரீ தேவ கணமும் புருஷன் தேவ கணமானாலும் உத்தமம்.ஸ்திரீ தேவ கணமும் புருஷன் இராச்சஷாகணமும் மத்திமம்.புருஷன் தேவ கணமும்,ஸ்திரீ மனுஷ கணமானாலும் பொருந்தா.இதன் பலன்:-கிரீடானுகூலம் ஷோபனகரம்.
3 மகேந்திரப் பொருத்தம்:-
பெண் நாள் முதல் புருஷன் நாள் வரை எண்ணும் போது 1-4-7-10-13-16-19-22-25 யானால் உத்தமம்.இதன் பலன்:-புத்திர விருத்தி.
4 ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம்:-
பெண் நாள் முதலாக என்னும்போது புருஷன் நாள் 13 க்கும் மேலனால் உத்தமம்.சிலர் 7 க்கும் மேல் மத்திமம் என்பர்.இதன் பலன்:-இந்த பொருத்தம் இராவிட்டால் ஷ்த்ரீக்கும் கண்டம்.
5 யோனிப் பொருத்தம் :-
யானைக்கும் சிங்கமும் மனுஷனும் ;குதிரைக்கும் பசுவும் எருமையும்;பசு,எருமைக்கடா,மான் நாய் இவைகளுக்கு புலியும்;குரங்குக்கு ஆடும்;எலிக்கு பூனையும்,பாம்பும்;பாம்புக்கு கீரியும்,ஆடும்;பூனைக்கு நாயும்,புலியும் பகையாம்;மானுக்கு பசுவும்,ஆட்டுக்கு குதிரையும் பகையாம்;மானுக்கு பசுவும்,ஆட்டுக்கு குதிரையும்;நாய்க்கு மனுஷரும் நட்பாம்.இவை அல்லாதவை சமம் .ஸ்திரீ புருஷர்களுக்கு பகையில்லாமல் இருந்து புருஷனுக்கு ஆண் யோனியும்,பெண்ணுக்கு பெண் யோனியுமாகில் மத்திமம்.புருஷனுக்கு பெண் யோனியும் பெண்ணுக்கு ஆண் யோனியாகிலும்,இருவருக்கும் சத்துரு யோனியாகிலும்,இருவருக்கும் சத்துரு யோனியாகிலும் பொருந்தா.இதன் பலன்:-அன்யோன்ய வசியம்.
6 ராசிப் பொருத்தம்:-
பெண்ணுக்கு புருஷன் ஒரு ராசியாயினும் பெண் ராசிக்கு புருஷன் ராசி 6க்கு மேற்படினும் உத்தமம் பெண் ராசிக்கு புருஷன் ராசி 3ம்,4ம் ராசியாகில் மத்திமம் .2-ம் ,5-ம்,6-ம் ராசியாகில் அதமம்.8-ம் ராசியாகிற் கூடாது .இதன் பலன் வம்ச விருத்தி .
7 ராசி அதிபதிப் பொருத்தம்

  கிராமம் நட்பு சமம் பகை
ஸ்திரீ புருஷ ராசி
அதிபதிகள் மித்திரர்கள்
அனாலும் சமமித்திரர்கள்
அனாலும் உத்தமம்.சம
சத்துருக்களானம் பொருந்தா.
இதன் பலன் :-சந்தான விருத்தி
சூரியனுக்கு சந்,அங்,குரு புதன் சு,சனி,ரா,கேது
சந்திரனுக்கு சூரியன்,புதன் அ,கு,சு,சனி ரக்து,கேது
அங்காரகனுக்கு சூரி,சந்,குரு சுக்கிரன்,சனி புத,ரா,கேது
புதனுக்கு சூரியன் சுக்கிரன் அங்க,குரு,சனி,ரகு,கேது சந்திரன்
குருவுக்கு சூரி,சந் ,அங் சனி,ரா,கேது புதன் ,சுக்கிர
சுக்கிரனுக்கு பு,சனி,ரா,கேது அங்கார,குரு . சூரியன் ,சந்திர
சனிக்கு பு,சுக்,ரா,கேது குரு சூரி ,சந் ,அங்
இராகுக்கு,கேதுக்கு புதன் ,குரு புதன் ,குரு .சூரி ,சந் ,அங்,

8 வசியப் பொருத்தம்:-
மேஷத்துக்குச் சிங்கமும் விருச்சகமும்;ரிஷபத்துக்கு கடகமும் ,துலாமும்; மிதுனத்துக்கு கன்னியும்;கடகத்திற்கு விருச்சகமும் தனுஷும்;சிங்கத்துக்கு மகரமும்;கன்னிக்கு ரிஷபமும் மீனமும்;துலாத்துக்கு மகரமும் விருச்சிகத்துக்கு கடகமும் கன்னியும் ;தனுசுக்கு மீனமும்; மகரத்துக்கு கும்பமும்;கும்பத்துக்கு மீனமும்;மீனத்துக்கு மகரமும் வசியமாம் .ஸ்திரீ ராசிக்கு புருஷ ராசி வசியமனால் உத்தமம் .புருஷ ராசிக்கு ஸ்திரீ ராசி வசியமனால் மத்திமம் .வசிய மில்லையெனில் பொருந்தாது இதன் பலன் வசியமாய் இருந்து வாழ்தல்.
9 ரச்சுப் பொருத்தம் :-
மிருகஷீரிஷம்,சித்திரை,அவிட்டம் ஆகிய இம்மூன்றும் சிரசு ரச்சு,  ரோகினி,திருவாதிரை,அஸ்தம்,சுவாதி,திருவோணம்,சதயம் ஆகிய இவ்வாறும் கண்ட ரச்சு கார்த்திகை புனர்பூசம்,உத்திரம் விசாகம்,உத்திராடம் புரட்டாதி ஆகிய இவ்வாறும் உத்தரரச்சு ;பரணி ,பூசம் பூரம்,அனுஷம் ,பூராடம் உத்திரட்டாதி ஆகிய இவ்வாறும் தொடை ரச்சு;அசுவனி ,ஆயில்யம் ,மகம்,கோட்டை,மூலம்,ரேவதி ஆகிய இவ்வாறும் பாத ரச்சு;ஸ்திரீ புருஷர்களுடைய நக்ஷத்திரங்கள் ஒரே ரச்சுவிலிருந்தால் பொருந்தாது .அவைகள் சிரசு ரச்சானால் புருஷன் மரணம்;கழுத்து ரச்சானால் புத்திர தோஷம்;தொடை ரச்சனால் திரவியநாசம்;பாத ரச்சனால் பிரயாணத்தால் தீங்கு உண்டாகும்.இதன் பலன் தீர்க்க சுமங்கலியாயிருத்தல்.
10 வேதை பொருத்தம் :-
அசுவனிக்கு கோட்டை, பரணிக்கு-அனுஷம், கார்த்திகைக்கு-விசாகம், ரோகினிக்கு -சுவாதி, திருவாதிரைக்கு-திருவோணம், பூனர் பூசத்திற்கு-உத்திராடம், பூசத்திற்கு-பூராடம், ஆயில்யத்திற்கு-மூலம், மகத்திற்கு-ரேவதி, பூரத்திற்கு-உத்திரட்டாதி, உத்திரத்திற்கு-பூரட்டாதி .அஷ்த்ததிற்கு-சதயம், ஒன்றுகொன்று வேதியம் .மிருக சீரிஷம் சித்திரை அவிட்டம் இவை ஒன்றுகொன்று பரஸ்பர வேதையாம்.வேதை உண்டானால் பொருந்தாது.
பொருத்தங்கள் நிர்ணயம்:-
இப்பத்து பொருத்தங்களில் தினம்,கணம்,யோனி,ராசி,ரச்சு இவ்வைந்தும் முக்கியமானவை.ரச்சு தட்டினால் மேற்படி விவாகம் செய்யகூடாது.மேற்கண்ட தச பொருத்தங்களில் 5க்கும் மேற்ப்பட்ட பொருத்தங்கள் இருந்தால் சுபம்.5க்கும் குறைந்தால் சகுனம் பார்த்து செய்யலாம்.பொன்னுக்கும் பிள்ளைக்கும் ஜாதகம் மீரவிட்டால் நாம நட்சத்திரத்திற்கு பொருத்தம் பார்க்கவும்.மிருக சீரிஷம் மகரம்,சுவாதி,அனுஷம்,இந்நான்கும் பெண் நட்சத்திரம் அல்லது பிள்ளை நட்சதிரமாயிருந்தால் பொருத்தம் பாராமல் விவாகம் செய்யலாம்.காந்தர்வம் கர்ப்ப நிச்சிதம்,சகுன நிச்சிதம்,குரு தெய்வ நியமனம் என்கிற கன்னிகா தானத்திற்கு எவ்வித பொருத்தமும் பாராமலே விவாகம் செய்யலாம்.

Sunday, July 27, 2014

கணவன் உண்ட அதே இலையிலோ அல்லது தட்டிலோ மனைவி உண்ண காரணம்!!

கணவன் உண்ட அதே இலையிலோ அல்லது தட்டிலோ மனைவி உண்ண காரணம்!!

கணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை கணவன் உண்ணும்போது எல்லாவற்றையும் உண்ண மாட்டான், அவனுக்கு சில உணவுகள் பிடிக்கும் சில உணவுகள் பிடிக்காமல் இருக்கும் அப்படி பிடிக்காமல் இருக்கும் உணவை அவன் அப்படியே மிச்சம் வைத்து விடுவான்,
அவனுக்கு பின் அதே இலையில் அல்லது தட்டில் உணவு உண்ணும் மனைவி மார்கள் கணவன் மிச்சம் வைத்த அவனுக்கு பிடிக்காத உணவு வகைகளை எளிதாக அடையாளம் கண்டு மறுமுறை சமைக்கும் பொழுது அந்தந்த உணவுகளை சமைக்காமல் தவிர்த்து விடலாம்,பிடித்ததை அடுத்த முறை நிறைய பரிமாறலாம், அதற்காக ஏற்படுத்தப் பட்டதே இந்த பழக்கம் ஆகும்.
கணவனில் எச்சிலில் இருக்கும் புதிய ஜீன்கள் சாப்பாட்டின் மூலம் மனைவியின் உடலில் கலந்து அது அவள் பாலூட்டும் குழந்தைக்கு கிடைக்கவே (ஜீன் அப்டேசன்) இந்த ஏற்பாடு.

என்ன தான் கணவனின் ஜீன் குழந்தைக்குள் இருந்தாலும் அது லேட்டஸ்டாக அப்டேட் ஆகவே இந்த ஏற்பாடு. மேலும் இது வயிற்றிற்குள் இருக்கும் குழந்தையின் முதல் ஆறு மாதத்திற்குள் உண்டாகும் வளர்சிதை மாற்றங்களுக்கும், பிறந்தபின் முதல் ஆறு மாதங்களுக்கு ஏற்படும் வளர்ச்சிக்கும் மிக மிக அத்தியாவசமாகிறது என்று மேல்நாட்டு அறிவியல் வல்லுனர்கள் கண்டறிந்து ஆச்சரியப்படுகின்றனர்...  இபொழுது சொல்லுங்கள் கணவன் உண்ட அதே இலையில் மனைவி உண்டால் ஆணாதிக்கமா?.

Saturday, July 5, 2014

பொருந்தாத திருமண உறவிலிருந்து விலகுவது எப்படி?



இரு மனங்கள் ஒப்பி உடன் வாழ்வதே திருமணம். திருமணம் என்ற சடங்குநடந்து விட்ட காரணத்தாலேயே இரு முரண்பட்ட மனங்கள் உடன் வாழ்வது தேவையில்லாதது.
‘திருமணம் என்பது ஒரு சமூக ஒப்பந்தம் மட்டுமே’ என்பதை புரிந்துகொண்டால், திருமணம் என்ற சடங்கில் எந்த தெய்வீகத்தன்மையோ,புனிதத்தன்மையோ இல்லை என்பதை புரிந்து கொண்டால் ‘மணவிலக்கு’என்ற சொல் எந்த விதத்திலும் அச்சுறுத்தாது.இரு மனங்கள் இணையும் திருமணத்தில், ஏதோ ஒரு மனம் உடன்பட முடியாவிட்டால் திருமணத்திற்கு முன்னரே பிரிவது அனைவருக்கும் நலம் பயக்கும். ஆனால் இந்திய திருமணச் சூழலில் திருமணத்திற்கு முன் மணம் செய்து கொள்ளவிருக்கும் இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல.உரிய காரணம் இன்றி பிரியும் துணையை மீண்டும் அழைக்க‘மணவாழ்வுரிமை மீட்பு சட்டம்’ பயன்படுகிறது.
பொருந்தாத திருமணத்திற்குப்பின், பிரிவதைத்தவிர வேறு வழியில்லைஎன்று முடிவெடுப்பவர்களுக்கும் சட்டம் வழிகாட்டுகிறது.
சிறப்புத் திருமணச் சட்டத்தின் பிரிவு 27, இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 13, (கிறிஸ்தவர்களுக்கான) இந்திய திருமண முறிவுச் சட்டம் ஆகியவை மத சடங்குகளில் ஈடுபாடு இல்லாதவர்கள் (Agnostics), நாத்திகர்கள் (Atheists), இந்துக்கள்,கிறிஸ்தவர்கள் ஆகியவர்களுக்கான மணமுறிவு உரிமைகளை விளக்குகின்றன.
சிறப்புத் திருமணச் சட்டத்தின்படி
1. வாழ்க்கைத் துணைவர் அல்லாத வேறொருவருடன் விரும்பி உடலுறவு கொள்ளுதல்,
2. மனுதாரரை உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ கொடுமைசெய்தல்,
3. மனுதாரரை இரண்டுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு கைவிட்டுச் செல்லுதல்,
4. தம்பதிகளில் ஒருவர் தீர்க்க முடியாத அளவில் மனநோய்க்கு ஆளாதல்,
5. தம்பதிகளில் ஒருவர் எளிதில் தொற்றக்கூடிய பால்வினை நோயால்பாதிக்கப்படுதல்,
6. தம்பதிகளில் ஒருவர் தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்கு மேலாக உயிருடன் உள்ளாரா? இல்லையா? என்பதை தெரியாதிருத்தல்,
7. திருமணமான கணவன் ஓரினப்புணர்ச்சி(Sodomy), விலங்குகளுடன் புணர்ச்சி (Bestiality)கொண்ட குற்றம் செய்தல்,
8. தம்பதிகளில் ஒருவர் இந்திய தண்டனை சட்டத்தில் கூறப்பட்டுள்ள குற்றம் ஒன்றிற்காக ஏழு ஆண்டுகளுக்கு குறையாத சிறைத்தண்டனை பெறுதல்
ஆகிய சூழ்நிலைகளின்போது பாதிக்கப்பட்டவர் உரிய நீதிமன்றத்தை அணுகி மணமுறிவு கேட்டு மனுச் செய்யலாம்.
இந்து திருமணச் சட்டத்தின்படி திருமணம் செய்தவர்கள், காரணம் 8 தவிர மேற்கண்ட காரணங்களுக்காகவோ, கணவரோ/மனைவியோஇல்லறத்திலிருந்து விலகி துறவறம் மேற்கொண்டாலோ, இந்துமதத்திலிருந்து வேறு மதத்திற்கு மாறினாலோ அதைக்காரணமாக கூறி மணவிலக்கு கோரலாம்.
கிறிஸ்தவ திருமணச் சட்டத்தின்படி திருமணம் செய்த ஒரு ஆண், மனைவியை மணவிலக்கு செய்ய வேண்டுமெனில், திருமணத்திற்கு பின்னர் மனைவி மாற்றானுடன் உடலுறவு செய்தால் மட்டும் அதை நிரூபித்து மணவிலக்கு கோரலாம்.
கிறிஸ்தவ திருமணச் சட்டப்படி திருமணம் செய்த கணவன்,
1. திருமணத்திற்கு பின் கிறிஸ்தவ மதத்தொழிலை விட்டு விலகி வேறு மதம் சார்ந்த தொழிலை மேற்கொண்டாலோ,
2. உடலுறவு கொள்ளத் தடை செய்யப்பட்ட உறவு முறையில் உள்ள வேறு ஒரு பெண்ணோடு உடலுறவுக் குற்றம் (incestuous adultery) புரிந்தாலோ,
3. மற்றொரு பெண்ணை இரண்டாவதாக மணம் செய்து கொண்டு அவளுடன் பிறன்மனைப் புணர்ந்தாலோ (bigamy with adultery),
4. வன்முறைப்புணர்ச்சி, இயற்கைக்கு மாறான புணர்வு, விலங்குகளுடன் புணர்தல்,
5. நெறிகெட்ட வாழ்க்கை காரணமாக பெண்ணை கொடுமை செய்தாலோ,
6. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் மனைவியை துறந்து சென்று விட்டாலோ,
7. ஆண்மையற்று இருந்தாலோ
… மனைவி மணவிலக்கு கோரி உரிய நீதிமன்றத்தில் மணவிலக்கு கோரலாம்.
இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கான சட்டமும் மணவிலக்கு குறித்த அம்சங்களை விவரிக்கிறது.
இஸ்லாமிய ஆண்களுக்கு மணமுறிவு குறித்து அளிக்கப்படும் உரிமைகள் எல்லை அற்றதாக உள்ளது.
மனைவிக்கு காரணத்தை தெரிவிக்காமலே “தலாக்” எனப்படும் மணமுறிவை அறிவிக்க இஸ்லாமிய ஆண் உரிமை படைத்தவனாகிறான். மேலும் மனைவிக்கு தெரிவிக்காமலே கூட தலாக்கை செயல்படுத்தும் திறன் இஸ்லாமிய ஆண்களுக்கு இருக்கிறது. இதில் நீதிமன்றம் தலையிடுவதில்லை.
இந்தியாவில் உள்ள இஸ்லாமிய பெண்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இஸ்லாமியர்கள் திருமண இழப்பு சட்டம், 1939ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி
1.  நான்கு ஆண்டுகளுக்கு மேல் கணவன் காணாமல் போய்விட்டால்,
2. மனைவிக்கு தேவையான பராமரிப்பு செலவுத்தொகையை கணவன் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு கொடுக்கத்தவறினால்,
3. கணவனுக்கு ஏழு ஆண்டுகளோ, அதற்கு அதிகமாகவோ சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால்,
4. கணவனுக்கு விதிக்கப்பட்ட திருமணக்கடமைகளான மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுதல், குழந்தைகளை பராமரித்தல் ஆகியவற்றை கணவன் மூன்று ஆண்டுகளுக்கு புறக்கணித்தால்,
5. கணவன் ஆண்மையற்று இருந்தால், தொழுநோய் பீடிக்கப்பட்டிருந்தால், தொற்றக்கூடிய பால்வினை நோய் இருந்தால், திருமணத்திற்கு தேவையான மனவளர்ச்சி இல்லாமலிருந்தால் …
…பாதிக்கப்பட்ட இஸ்லாமியப் பெண் உரிய நீதிமன்றத்தை அணுகி மணமுறிவு பெறலாம்.
இத்தகைய வழக்கு விசாரணைகளை பொதுவில் நடத்தாமல், மூடிய அறைக்குள் நடத்தவும் (In Camera Proceedings), வழக்கு விவரங்களை செய்தியாளர்கள் வெளியிடாமல் தடுக்கவும் முடியும். வழக்கு தரப்பினர்கள் உடன்படும் நிலையில் வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி இசைவின் பேரில் மணமுறிவு (Divorce by Mutual Consent) பெறவும் இயலும்.
இத்தகைய மணமுறிவு கேட்கும் தரப்பினர் உரிய வருவாய் இன்றி அவதியுறும் நிலையில், எதிர் தரப்பினர் வருவாய் படைத்தவர் என்று நிரூபிக்க இயலும் நிலையில் மனுதாரருக்கு தற்காலிக அல்லது நிரந்தர பராமரிப்பு கோரவும் இயலும்.

எனவே, பொருந்தா மண உறவில் யாரும் விருப்பமின்றி நீடிக்கவேண்டிய தேவையில்லை. எனவே துணிந்து முடிவெடுங்கள்.அதற்கு முன் உங்கள் எதிர்காலம் குறித்தும், குழந்தைகள்(இருந்தால்) எதிர்காலம் குறித்தும் ஆழச் சிந்தித்துவிட்டு!

மனரீதியாக துன்புறுத்தினாலும் விவாகரத்து நிச்சயம்

மனரீதியாக துன்புறுத்தினாலும் விவாகரத்து நிச்சயம்- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு  Wednesday, July 2, 2014, 11:56 [IST] Ads by Google டெல்லி: கணவன் மற்றும் மனைவி மனரீதியாக கொடுமையை அனுபவித்தாலும், சம்பந்தப்பட்டவர்களுக்கு விவாகரத்து வழங்கப்படலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பெங்களூரைச் சேர்ந்த ஒரு மருத்துவ தம்பதி விவாகரத்து கோரி மனு செய்திருந்தனர். அவர்களுக்கு முகோபாத்யாய் மற்றும் தீபக் மிஸ்ரா அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது. மனரீதியாக துன்புறுத்தினாலும் விவாகரத்து நிச்சயம்- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு மன ரீதியான சித்திரவதையை காரணம் காட்டி இந்த விவாகரத்தை பெஞ்ச் வழங்கியது. அப்போது நீதிபதிகள் கருத்து தெரிவிக்கையில், மனம் மற்றும் உள ரீதியான கொடுமைகளை மனைவி கணவனுக்கு செய்தாலும், கணவன் மனைவிக்கு செய்தாலும் அது அளவிட இயலாத கொடுமை ஆகும். இது சமூகத்திற்கு சமூகம் மாறுபடும் அது, தனிநபரைப் பொறுத்தும் வேறுபடும். இந்த வழக்கில், கணவர் மீது அவதூறு குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டுள்ளதோடு, அவரை அவமானமும்படுத்தி உள்ளனர். அத்துடன், அவரின் உறவினர்கள் இருவருக்கும் இடையே சண்டையை பெரிதுபடுத்தி உள்ளனர். இதையெல்லாம், கொடுமையாகவே கருத முடியும். அதனால், அந்த அடிப்படையில் விவாகரத்து வழங்கப்படுகின்றது என்று தீர்ப்பில் கூறியுள்ளனர்.

Read more at: http://tamil.oneindia.in/news/india/mental-cruelty-its-effects-vary-from-person-person-sc-204952.html

INFORMATION



Thursday, June 26, 2014

NEWS

Tamil language newspapers and news sites