Monday, December 23, 2019

கடுகுரோகிணி

உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தில் ஆயுர்வேதம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. பெரும்பாலும் ஆயுர்வேதத்தில் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு உள்ளது. சிறப்பான வழியில் நோய்களை குணப்படுத்தக்கூடிய பல்லாயிரக்கணக்கான மூலிகைகள் ஆயுர்வேதத்தில் பொதிந்து உள்ளன. அவற்றுள் ஒரு முக்கிய மூலிகை கடுகுரோகிணி. 
                       இதற்கு முன்னர் இந்த மூலிகையைப் பற்றி பலரும் கேள்விப்பட வாய்ப்பில்லை. அதனால் எண்ணிலடங்கா சிறப்புகளை பெற்ற இந்த மூலிகை பற்றி இந்த பதிவில் நாம் இப்போது காணலாம். Katuki Herb Benefits இமாலய மலைகளில் காணப்படும் ஒரு மூலிகையான கடுகுரோகிணி, உங்கள் உடல்நலம் மற்றும் செயல்பாட்டை பாதிக்கும் பல நோய்களிலிருந்து உங்கள் உடலை பாதுகாக்கக்கூடிய அரிய மூலிகைகளில் ஒன்றாகும். கசப்பு சுவையைக் கொண்டிருக்கும் இந்த மூலிகையை உங்கள் உணவு அட்டவணையில் இணைத்துக் கொள்வதால், உங்கள் உடலுக்கு மிகப்பெரிய நன்மைகள் உண்டாகும். 
                      உங்களுக்கு அதிக உடல் எடை இருந்தால் கடுகுரோகிணி உட்கொண்டு வருவதால் உங்களுக்கு சிறந்த தீர்வு கிடைக்கும். இந்த மூலிகையில் இருந்து எடுக்கப்படும் சாறு செரிமானத்திற்கு உதவி, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இதனால் உடலின் தேவையற்ற கொழுப்புகள் விலகி எடை அதிகரிப்பைத் தடுக்கின்றது. சுவாசப் பிரச்சனையைப் போக்கும் சுவாசப் பிரச்சனையைப் போக்கும் இன்றைய காலகட்டத்தில் பல்வேறு வகையான மாசுபடுத்திகள் காரணமாக சுவாசிப்பதில் சிரமம் உண்டாகிறது. இதன் காரணமாக சுவாச கோளாறுகள் உடலை பாதிக்கின்றன. குறிப்பாக ஆஸ்துமா நோயாளிகளுக்கு மாசு, மிகுந்த மோசமான பாதிப்பை உண்டாக்குகிறது. நுரையீரல் பாதிக்கப்படாமல் இருக்க சுவாசப் பாதையில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்க வேண்டும். 
 
 
 
*********** 
கடுகுரோகிணியில் இயற்கையாகவே அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், 
மூக்கடைப்பு ஏற்படுவது குறைகிறது,
 சுவாசப் பாதையில் உள்ள அடைப்பு திறக்கப்பட்டு மாசுபடுத்திகளை வெளியேற்றுகிறது. 
ஆஸ்துமா நோயாளிகளைப் பொறுத்தவரை,
 இது அவர்களின் உடலில் நிலைமையை மோசமாக்கும் ஹிஸ்டமைனைக் கட்டுப்படுத்துவதால் இது மிகவும் நன்மை பயக்கும். 
 
**************************************************
உடல் வெப்பநிலையை நிர்வகிக்கிறது உடல் வெப்பநிலையை நிர்வகிக்கிறது பொதுவாக நமக்கு காய்ச்சல் வந்தால் உடனே ஒரு மாத்திரையை விழுங்குவது நம்முடைய பழக்கம். 
 
 
 
ஆனால் இந்த மாத்திரைகள் உடலுக்கு நல்லதல்ல. மாத்திரைக்கு மாற்றாக கடுகுரோகிணி உட்கொள்வதால் உங்கள் உடல் வெப்பநிலை கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த மூலிகையின் அற்புதமான ஆன்டிபிரைடிக் என்னும் வெப்பத்தைத் தணிக்கும் பண்புகள் உடல் வெப்பநிலையில் திடீர் மாற்றங்களை அகற்றி அழற்சியை எதிர்த்துப் போராடுகின்றன. மிதமான காய்ச்சல் இருக்கும் நாட்களில் கடுகுரோகிணி பொடியை உட்கொள்வதால் விரைந்த பலன் கிடைக்கும். 
 
பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடும். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த மூலிகை உதவுகிறது. காயத்தை குணமாக்குகிறது காயத்தை குணமாக்குகிறது ஒரு காயம் அல்லது புண் மீது மஞ்சள் தடவுவதால் விரைவில் குணமாகும் என்பதை நாம் அறிவோம். 
 
 
 
கடுகுரோகிணியில் காயங்களை எதிர்த்துப் போராடும் ஆன்டிஆக்ஸிடண்ட் பண்பு இருப்பதால் மஞ்சளைப் போல் இந்த மூலிகையும் காயங்களை உடனடியாக குணமாக்குகிறது. சில ஆய்வுகள் இந்த மூலிகை விட்டிலிகோ மற்றும் சொரியாசிஸ் போன்ற பாதிப்புகளைக் கூட திறம்பட போக்குகிறது என்று கூறுகின்றன. 
 
 
கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது இமய மலை மூலிகையை உட்கொள்வது கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளை சமநிலைப்படுத்துவதன் மூலம் உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாப்பாக வைத்திருக்கும். 
 
 
 
 
கடுகுரோகிணியில் ‘குட்கின்' அல்லது ‘பிக்ரோலிவ்' என்சைம் உள்ளது, இது கல்லீரல் செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது மற்றும் பித்த கோளாறுகள் போன்ற சிக்கல்களைத் தடுக்கிறது. மேலும் இது கல்லீரல் செயல்பாட்டை அதிகரிக்க அவற்றை சுத்தப்படுத்துகிறது. இது கல்லீரலின் ஆரோக்கியத்தை பாதிக்கும் கிருமித் தாக்குதலைத் தடுக்கிறது.

Friday, December 6, 2019

போதுமென்ற மனமே நிம்மதி

போதுமென்ற மனமே நிம்மதி



எந்த நேரமும் அறுந்து போகும் ஒற்றை நுாலில் தொங்கிக் கொண்டிருக்கிறது நமது வாழ்க்கை. நுாலை கண்டவாறு சுற்றி சிக்கலாக்கி கொள்வதுதான் நமது வழக்கம். உறவு, பணம், பொருள் என சந்தோஷமாக வாழும் வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை. ஏதாவது ஒரு உறவை இழப்பின், அடுத்த நொடியிலேயே வாழ்க்கை சூனியமாக, பற்றற்றதாக மாறிவிடும்.


நிம்மதியாக வாழ

எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருக்கும் ஞானியைப் பார்க்கச் சென்றார் ஒருவர். அப்பொழுது அந்த ஞானி முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்து அதில் அவ்வப்போது முகத்தைப் பார்த்துக் கொள்வதும், பின்பு எடுத்து வைப்பதுமாக இருந்தார்.

எல்லாம் துறந்த ஞானி அடிக்கடி தன்னை கண்ணாடியில் பார்த்து அழகு படுத்திக் கொள்கிறாரே என நினைத்து தயங்கியவாறே அவரிடம் ஏன் கண்ணாடியை அடிக்கடி பார்க்கிறீர்கள் என கேட்டார். அவர் சொன்னார் 'தம்பி, எனக்கு கவலை, பிரச்னை, துன்பம் வரும்பொழுதெல்லாம், யார் காரணம் என்று தெரிந்துகொள்வதற்காக இந்த முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்துப் பார்ப்பேன். யார் என்று தெரிந்து விடும். உடனே என்னை சமாதானப்படுத்திக் கொள்வேன். ஆகையால் தான் என்னால் கவலையின்றி இருக்கமுடிகிறது' என்றார். பிரச்னைக்கு நாம் தான் காரணம் என விளக்கினார்.


வாலறுந்த நரி

காட்டில் உள்ள நரி பக்கத்தில்இருக்கும் திராட்சை தோட்டத்திற்கு அடிக்கடி திருட்டுத்தனமாக சென்று திராட்சையை சாப்பிட்டு வந்தது. ஒருநாள் நரியை கையும் களவுமாக பிடித்த தோட்டக்காரன் அதன் வாலை ஒட்ட வெட்டி விட்டான். நரிக்கு அவமானமாகி விட்டது. எப்படிடா இந்த ஊரில் தலை காட்டுவது, என தயங்கியவாறு காட்டுக்குள் நுழைந்தது. எல்லா நரிகளும் அதனைப் பார்த்து சிரித்தன.

உடனே அந்த நரி சொன்னது, 'என்னைப் பார்த்து சிரிக்காதீர்கள், நான் கடவுளைப் பார்த்துவிட்டு வந்தேன். அவர் சொன்னதால் தான் இந்த வாலை நறுக்கி விட்டேன்; நான் கடவுளின் அவதாரம்' என்றது.

நம்பாமல் எல்லா நரிகளும் வாலறுந்த நரியை பொறாமையாக பார்த்தன. ஒரு நரி மட்டும் அதனிடம், 'நானும் கடவுளைப் பார்க்கலாமா?' என கேட்டது.'அந்த தோட்டத்திற்கு சென்றால் கடவுள் இருப்பார்' என நரியை திராட்சை தோட்டத்துக்கு போகச் சொன்னது. புதிதாக வந்த நரியை பிடித்த அந்த தோட்டக்காரன் அதன் வாலையும் ஒட்ட வெட்டி விட்டான்.



சிக்கலில் தவிக்கிறோம்

கடும் கோபத்துடன் வந்த புதிய நரி, ஏற்கனவே வாலறுந்த நரியைப் பார்த்து, 'ஏன், என்னை ஏமாற்றினாய்?' என திட்டியது.அப்பொழுது பழைய நரி சொன்னது, 'எனக்கும் வாலில்லை. உனக்கும் வாலில்லை. காரணத்தை வெளியே சொன்னால் நமக்கு அசிங்கம். ஆகவே இந்த டயலாக்கைச் சொல்லி எல்லோரையும் திராட்சை தோட்டத்துக்கு அனுப்புவோம். அப்பொழுது தான் வாலில்லாத நரிகளை அதிகமாக்கி நாம் பெரும்பான்மை பெற முடியும்' என சொல்லியது.எல்லா நரிகளும் வால் இழந்தது போல் நாமும் நமது ஆசை மற்றும் தேவைகளுக்காக சந்தோஷத்தை அடகுவைத்து பெரும் தொகை கடன் வாங்கி பொருளாதார சிக்கலில் தவிக்கிறோம்.


நம்பிக்கை விதைப்போம்

ஒரு பெரிய கப்பல் வெளிநாட்டுக்கு புறப்பட்டது. பயணம் செய்பவர்களுக்கு இரண்டு பேருக்கு ஒரு அறை கப்பலில் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஓர் அறையில் முரட்டுத் தனமாக ஒருவன் இருந்தான். மற்றொருவன் சாதுவாக பணிவாக இருந்தான்.இருவரும் கை நிறைய பொருளும், பணமும் வைத்திருந்தனர். சாதுவாக இருந்தவனுக்கு அடுத்தவனைப் பார்த்து பயம். நம் அறையில் இருப்பவன் பக்கா முரடனாக இருக்கிறானே. இந்த பொருளை நம்மால் பத்திரமாக எடுத்துக் கொண்டு செல்ல முடியுமா என தயங்கியவாறு பொருளை எல்லாம் ஒரு பெட்டியில் வைத்து நேராக கப்பலின் பாதுகாப்பு அதிகாரியை அணுகி, 'நான் ஊர் சென்று சேரும் வரை இந்த பெட்டியை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். இதற்குள் பணமும் நகையும் இருக்கின்றன' எனக் கொடுத்தான்.


மற்றவர்கள் மேல் பழி

அதிகாரி, 'உன் அறையிலேயே வைத்து விட வேண்டியது தானே. பத்திரமாகத் தானே இருக்கும்' என்றார். 'இல்லை ஐயா. என் அறையில் என்னுடன் ஒரு மகாமுரடன் தங்கி இருக்கிறான். அவனை பார்ப்பதற்கே பயமாக இருக்கிறது. ஆகையால் இந்த பெட்டியை உங்களிடம் கொடுத்து வைக்கிறேன். ஊர் வந்ததும் வாங்கிக் கொள்கிறேன்' என்றான். 'கொஞ்ச நேரம் முன்புதான் உங்கள் அறையிலிருந்த அந்த முரடன், அவனுடைய பெட்டியை கொடுத்துவிட்டு போனான். என் அறையில் இருப்பவன் பார்ப்பதற்கு சாது மாதிரி தெரிகிறான், ஏமாற்றுகாரனாக இருப்பானோ என பயமாக இருக்கிறது, இந்த பெட்டியை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கொடுத்துவிட்டு போனான்' என்றார். இப்படித்தான் ஒருவரை ஒருவர் நம்பாமல் மற்றவர்மேல் பழி போட்டு நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.


நேர்மையே நிம்மதி

மருத்துவ முகாமில் ஒரு முதியவரை சந்தித்தேன். பார்த்து 20 ஆண்டுகளுக்கு மேலிருக்கும். டக்கென அடையாளம் தெரிந்தது. நன்கு மெலிந்திருந்தார். இனம் புரியாத சோகம் முகத்தில். 'நல்லா இருக்கீங்களா, உங்க பசங்க எப்படி இருக்காங்க' என்றேன். தனது மகன்களை எனது மருத்துவமனைக்கு முன்பு அழைத்து வருவார். மிகவும் வசதியானவர். பொதுப்பணித் துறையில் உயர்ந்த பதவியில் இருந்தவர்.

'வருமானம் நல்லா இருந்தது டாக்டர். கூடுதல் வருமானம் உண்டு. உங்க கிட்ட கூட்டிட்டு வருவேனே அந்த இரண்டு பசங்களையும், அமெரிக்காவில் படிக்க வைத்தேன். என்னிடம் இருந்த எல்லா பணத்தையும் அவங்க படிப்பு வேலைக்கு செலவு பண்ணினேன். பணம், பணம் என என்னென்ன வழிகள் இருக்கிறதோ அவற்றையெல்லாம் கண்டுபிடித்து பணம் சம்பாதித்தேன்.

பசங்களும் வெளிநாட்டில் செட்டில் ஆக, நன்றாக போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில், மனைவி திடீரென இறந்துவிட உடல் மற்றும் மனதளவில் பலகீனமானேன். பசங்க என்னை வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்ல தயாராக இல்லை. இங்கு வருவதுமில்லை. நான் செய்து வந்த தொழிலையும் செய்ய முடியவில்லை. கொஞ்ச கொஞ்சமாக நஷ்டம் ஆகி ஓய்வுக்குப் பின் கடனாளி ஆனேன். ஒரு முதியோர் இல்லத்தில் காவலாளியாக தங்கியிருக்கிறேன். பென்ஷன் பணம் வட்டி கட்டவே சரியாக உள்ளது. நான் சம்பாதித்த பணம் எல்லாம் எங்கே போனது என்றே தெரியவில்லை. எத்தனை பேர் வேதனையுடன் இந்த பணத்தை கொடுத்திருப்பார்கள் என இப்பொழுது தெரிந்து கொண்டேன்.

மனைவி இறந்த ஒரே நாளில் என் வாழ்க்கை தலைகீழாகி விட்டது. நான் வாங்கிய லஞ்சப்பணம் எதிர்கால நிம்மதி தொலைத்து விட்டது. இனி கடவுள் விட்ட வழி. இன்று அனாதையாக காலத்தை கழித்து வருகிறேன்' என கலங்கினார்.


நிரந்தரமில்லை

பிள்ளை, பொருள், பணம் என நாம் சேர்க்கும் எதுவும் நிரந்தரமில்லை என்பதை புரிந்து கொண்டால் நேர்மையாக நிம்மதி யாக வாழ முடியும். உடலில் ஆரோக்கியம் இருக்கும் வரை மட்டும்தான் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ முடியும். நாம் சேர்க்கும் பணம், பொருள், எல்லாவற்றையும் விட உடலளவிலும், மனதளவிலும் சந்தோஷமாக இருந்த கணங்களே, தருணங்களே என்றும் நிலைத்து நிற்கும்.-டாக்டர். ஜெ.ஜெயவெங்கடேஷ்

Tuesday, October 8, 2019

வயிற்றுப் புண்ணை குணமாக்கும் மணத்தக்காளி கீரை...!

வயிற்றுப் புண்ணை குணமாக்கும் மணத்தக்காளி கீரை...!


மணத்தக்காளி இலை சிறிது இனிப்புச் சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டது. சருமம் தொடர்பான பல நோய்கள் வராமல் கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்டது. இதில் வைட்டமின் இ, டி அதிக அளவில் உள்ளதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மணத்தக்காளிக் கீரையைச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால், இருமல், இளைப்பு பிரச்னை குணமாகும். வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும் சக்தி மிகுந்தது இந்தக் கீரை. சிறுநீர், வியர்வையைப் பெருக்கி உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும்.
 
கருப்பையில் கருவலிமை பெறவும், பிரசவத்தை எளிமைப்படுத்தவும் இக்கீரை உதவுகிறது. மணத்தக்காளியின் வேர் மலச்சிக்கலை நீக்கும் மருந்துகளில் சேர்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மணத்தக்காளி இலைச்சாற்றை 35 மி.லி வீதம் நாள்தோறும் மூன்று வேளைகள் உட்கொண்டுவந்தால், சிறுநீரைப் பெருக்கும்; உடலில் நீர் கோத்து ஏற்படும் வீக்கம், உடல் வெப்பம் ஆகியவற்றைக் குணப்படுத்தும். 
 
மணத்தக்காளிக் கீரை வாய்ப்புண்களைக் குணமாக்கும் அருமருந்து. இதன் பச்சை இலைகளைத் தேவையான அளவு நெய் சேர்த்து வதக்கி, துவையல் செய்து, சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டுவர வாய்ப்புண் குணமாகும். 
 
வெறும் பச்சை இலைகளை, நாள் ஒன்றுக்கு ஐந்துமுறைகள் நன்றாக மென்று சாற்றை விழுங்கினாலும், வாய்ப்புண் முழுமையாக குணம் ஆகும். மணத்தக்காளிப் பழம் டானிக் போல மதிப்பு மிகுந்த பழமாகும். பேதி மருந்தாக இப்பழத்தைச் சாப்பிடலாம். 
 
மூட்டுப் பகுதியில் ஏற்படும் வீக்கங்கள் காரணமாக அவதிப்படுபவர்கள், மணத்தக்காளி இலைகளை வதக்கி, மூட்டுப் பகுதியில் ஒத்தடம்  கொடுத்தால், நல்ல பலன் கிடைக்கும். 

விடாத காய்ச்சலை விரட்டி அடிக்கும் நிலவேம்பு குடிநீர்...!!

விடாத காய்ச்சலை விரட்டி அடிக்கும் நிலவேம்பு குடிநீர்...!!


தற்போது சிக்குன் குனியா, டெங்கு என்பதுபோன்ற பல பெயர்களில் நவீன மருத்துவத்தில் குறிப்பிடுகிறார்கள். அத்தகைய விஷக் காய்ச்சல்களைக் குணப்படுத்தும் நோக்கில் கஷாய வடிவில் கொடுக்கப்படுவதுதான் இந்த 'நிலவேம்புக் குடிநீர்'.
நிலவேம்பு, வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனம், கோரைக்கிழங்கு (கோரைப்புல்லின் கிழங்கு), பேய்ப்புடல் (புடலங்காய் வகைத் தாவரம்), பற்படாகம் (ஒரு புல் வகையைச் சேர்ந்தது), சுக்கு, மிளகு ஆகியவற்றின் கலவையே நிலவேம்புக் குடிநீர்  தயாரிப்பதற்கான  மூலப்பொருள்களாகும்.
 
தயாரிக்கும் முறை:
 
இந்த மூலப்பொருள்கள் ஒவ்வொன்றையும் சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். ஆயுர்வேதத்தில் கஷாயம்  தயாரிக்கும்போதும் தயாரிக்கக்கூடிய மூலப்பொருள்களின் தன்மை மற்றும் தரத்தைப் பொறுத்து, அதனுடன் நான்கு அல்லது  எட்டு அல்லது 16 மடங்கு என  சூரணம் அதனுடன் தண்ணீர் சேர்க்கப்படும். அதன்படி நிலவேம்புக் குடிநீர் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருள்களுடன் 8 மடங்கு  தண்ணீர் சேர்த்து, அதை 4 மடங்காக வற்றும்வரை கொதிக்க வைக்கவேண்டும். பின்னர் ஆற வைத்து வடிகட்டினால் நிலவேம்புக் குடிநீர் தயார். 
 
நிலவேம்புக் குடிநீரை, இளஞ்சூடாக குடிப்பதுதான் சிறந்தது. அதுவும் தயாரித்த 3 மணி நேரத்துக்குள் குடித்து விட வேண்டும்.  நேரம் செல்லச்  செல்ல, அதன் வீரியம் குறைந்து விடும். அதேபோல, முதல் நாள் தயார் செய்த நிலவேம்புக் குடிநீரை, அடுத்த  நாள்வரை வைத்துக் கண்டிப்பாகக் குடிக்கக் கூடாது.குளிர்சாதனப் பெட்டிகளில் வைத்தும் பயன்படுத்தக்கூடாது. 
 
நிலவேம்புக் குடிநீரை ஒரு நாளைக்கு 10 மி.லி முதல் 50 மி.லி வரை அருந்தலாம். இதில் குழந்தைகள் 10 மி.லி சிறுவர்கள் 15  மி.லி  பெரியவர்கள் 15-ல் இருந்து 50 மி.லி வரை குடிக்கலாம். காய்ச்சல் பாதித்தவர் ஒரு நாளைக்கு மூன்று தடவை குடிக்கலாம். நிலவேம்புக் குடிநீரை, எப்போதும் சாப்பாட்டுக்கு முன் குடிப்பதுதான் சிறந்தது. அப்போதுதான். அதை முழுமையாக உடல்  உட்கிரகித்துக் கொள்ளும்.
 
மருத்துவக் குணங்கள்:
 
இதில் உள்ள வேதிப்பொருள்கள் காய்ச்சல் தீர்ப்பதுடன் வைரஸ் கிருமிகளை அழிக்கும் ஆன்டிபயாடிக் தன்மையையும் கொண்டது. கோரைக்கிழங்கு, பற்படாகம் ஆகியவை காய்ச்சல் தீர்க்கும் சிறந்த மருந்தாகும். பேய்ப்புடல் குடலில் தங்கியுள்ள மாசுக்களை வெளியேற்றும்.  சுக்கு, மிளகு ஆகியவை உடலின் நொதிகள் மற்றும் என்சைம்களின் சுரப்பைச் சீராக்கும்.

உடல் எடையையும் விரைவில் குறைக்க உதவும் வாழைத்தண்டு...!!

உடல் எடையையும் விரைவில் குறைக்க உதவும் வாழைத்தண்டு...!!

banana stem

வாழைத்தண்டில் நார்ச்சத்து அளவுக்கு அதிகமாக இருப்பதால், எடையைக் குறைக்க நினைப்போர் வாழைத்தண்டு ஜூஸை காலையில் தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருப்பதோடு, உடல் எடையையும் விரைவில் குறையும்.
சிறுநீரக கற்கள் வராமல் இருக்கவும், இருக்கும் சிறுநீரக கற்கள் விரைவில் கரையவும், குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது  வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க வேண்டும்.
இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரக்க நேர்ந்தால், நெஞ்செரிச்சல் ஏற்படும். இதனை சரிசெய்ய வெறும் வயிற்றில் வாழைத்தண்டு  ஜூஸ் குடிக்க வேண்டும்
மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள், நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை உட்கொள்வதன் மூலம், மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம். அதிலும் வாழைத்தண்டு ஜூஸ் குடித்தால், மலச்சிக்கல் உடனே குணமாகும்.
வாழைத்தண்டு ஜூஸ் செய்முறை:
மிக்ஸியில் வாழைத்தண்டை போட்டு, அதில் உப்பு, மிளகு, வறுத்த சீரகம் மற்றும் பிரஷ்ஷான தயிர் சேர்த்து நன்கு அரைத்து, பின் அதில் தேவையான அளவு நீரை ஊற்றி வடிகட்டினால், வாழைத்தண்டு ஜூஸ் தயார்.

Wednesday, October 2, 2019

சளியினால் ஏற்படும் தொல்லையை கட்டுக்குள் வைக்கும் கற்பூரவள்ளி...!

சளியினால் ஏற்படும் தொல்லையை கட்டுக்குள் வைக்கும் கற்பூரவள்ளி...!

karpooravalli

கற்பூரவல்லி இலைகள் கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும். இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது. கற்பூரவல்லியின் தண்டும், இலைகளும் பயன்தரக்கூடியவை. கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி,  ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு முக்கிய மருந்து.
கற்பூரவல்லி இலைகள் கார்ப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. உடல் வெப்பத்தை அதிகரிக்கும்; வியர்வையை அதிகமாக்கும்;  கோழையகற்றும்.
மருத்துவ துறையில் இது நரம்புகளுக்குச் சத்து மருந்தாகிறது. மனக் கோளாறுகளைச் சரிசெய்யும். சிறுநீரை எளிதில் வெளிக் கொணரவும் பரிந்துரைக்கப்படுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தும் தாவரமாகவும் கருதப்படுகிறது.
இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல், சளிக் காச்சல் போகும். இதன் இலைகளை எடுத்து கழுவி சாறெடுத்து இரண்டு மி.லி  சாருடன் எட்டு மி.லி தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மார்பு சளி கட்டுக்குள் வரும்.
கற்பூரவல்லி இலை, தூதுவளை, வல்லாரை, இவற்றை சம அளவு எடுத்து பொடியாக்கி அதில் 1 ஸ்பூன் அளவு எடுத்து 100 மி.லி தண்ணீர்  விட்டு கொதிக்க வைத்து 50 மி.லியாக சுண்டக் காய்ச்சி, அதனுடன் சிறிது பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால், நுரையீரல் பாதிப்பு நீங்கும்.  மூச்சுக்குழல் அடைப்பு சீராகும். 
கற்பூரவல்லி சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து காலை வேளையில் அருந்தி வந்தால் மூக்கில் நீர்வடிதல், சளி, இருமல், தொண்டைக்  கட்டு தொண்டைக் கம்மல் குணமாகும்.
இலையின் சாறு முழுமையாக நீரில் இறங்கி தண்ணீர் லேசாக பச்சை நிறத்தை அடைந்து இருக்கும். அந்த நீரை மட்டும் குழந்தை பருகுவதற்குக் கொடுங்கள். 2 அல்லது 3 நாட்களுக்கு இதுபோன்ற நீரையே கொடுத்து வாருங்கள். குழந்தைக்கு சளியின் தீவிரம் கட்டுப்படும்.
சிலருக்கு வறட்டு இருமல் இருமும் போது நெஞ்சுப்பகுதி அதிகமாக வலியெடுக்கும். இதனைத் தடுக்கவும் ஓமவல்லி பயன்படுகிறது. ஒரு கொத்து ஓமவல்லி இலைகளை எடுத்து அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால்  வறட்டு இருமல் கட்டுப்படுத்தப்படும்.

Monday, May 20, 2019

மூக்கிரட்டை கீரை

இந்த ஒரு கீரை போதும்... நீங்க அவதிப்படற இந்த 10 நோயையும் ஓடஓட விரட்டலாம்...  Monday, May 20, 2019, 13:16 [IST] நம்முடைய முன்னோர்கள் முதல் நவீன காலம் வரை கீரைகள் பற்றிய எண்ணங்கள் எல்லாருக்குமே ஒன்று தான். அது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது என்று. நம்முடைய முன்னோர்களின் சமையலில் நிசச்யம் கட்டாயம் தினசரி உணவில் கீரைகள் கிடைக்கும். வீட்டைச் சுற்றியும் தோட்டங்களிலும் உள்ள கீரைகளைப் பறித்து பயன்படுத்தி வந்தார்கள். Punarnava அதில் மிக முக்கியமான ஒரு கீரை தான் மூக்கிரட்டை கீரை. இது வீட்டைச் சுற்றிலும் யாரும் பயிராடமல் தானாகவே முளைத்து வரும். இதை வாரத்தில் 2 நாள் சாப்பிட்டால் போதும் கல்லீரல் பிரச்சினை, உடல் பருமன், சிறுநீர்ப்பாதை தொற்று, நீரிழிவு, இதய நோய்கள், கண்கள் நோய்கள் அத்தனையையும் விரட்ட முடியும். அது பற்றி இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் கீரைகளின் முக்கியத்துவம் கீரைகளின் முக்கியத்துவம் பொதுவாக கீரை என்று சொன்னாலே நமக்குத் தெரிந்ததெல்லாம் முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை, முளைக்கீரை, வெந்தயக்கீரை, பசலைக்கீரை போன்றவை தான். ஆனால் அதைத் தாண்டி நம்மைச் சுற்றி ஏராளமான கீரைகள் இருக்கின்றன. அவற்றின் முக்கியத்துவத்தைத் தெரிந்து கொண்டாலே போதும்ஃ ஆரோக்கியமான முறையில் தினம் ஒரு கீரையை வேறுவேறு சுவையுடன் சாப்பிட முடியும். MOST READ: இந்த யூக்கா கிழங்கோட மகிமை தெரியுமா? மாரடைப்பை கூட தடுக்குமாம்... மூக்கிரட்டை கீரை மூக்கிரட்டை கீரை மூக்கிரட்டை கீரை யாரும் விதை போட்டு வளர்வதில்லை. தானாக வேலிகளில் சாதாரணமாக தரைகளில் வேர் விட்டு வளர்ந்து கிடக்கும். நிறைய பேர் இது ஆடு, மாடுகள் சாப்பிடும் இலை என்று மட்டும் நினைத்துக் கொள்வார்கள். ஆனால் அது அப்படியல்ல. இந்த கீரையில் மற்ற எல்லா கீரைகளைக் காட்டிலும் அதிக அளவில் நோய் தீர்க்கும் ஆற்றல் இருக்கிறது. அது பற்றி கீழே பார்க்கலாம். ஊட்டச்சத்துக்கள் ஊட்டச்சத்துக்கள் மூக்கிரட்டை கீரையில் அதிக அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. 100 கிராம் அளவு கீரையில் வெறும் 1.61 சதவீதம் மட்டுமே கொழுப்புச் சத்து இருக்கிறது. அதேசமயம் 162 மில்லி கிராம் அளவுக்கு சோடியம் இருக்கிறது. நம்முடைய ஒரு நாளைக்கு தேவையான புரதத்தில் 2.26 சதவீதத்தை நிறைவு செய்துவிடுகிறது. 44.8 மில்லி கிராம் அளவு வைட்டமின் சி இருக்கிறது. 142 மில்லி கிராம் அளவுக்கு கால்சியமும் 0.012 மில்லிகிராம் இரும்புச்சத்தும் இருக்கிறது. கல்லீரலை பாதுகாக்க கல்லீரலை பாதுகாக்க நம்முடைய உடலில் கல்லீரல் மிகமிக முக்கியமான உறுப்பு. நம்முடைய உடல் நிலை சரியில்லாத சமயங்களில், மன அழுத்தம், நெஞ்சு வலி போன்ற சமயங்களில் கல்லீரலின் பணி மிக முக்கியமானது. அது அந்த சமயங்களில் அதிதீவிரமாக வேலை செய்து நம்முடைய உயிரைக் காப்பாற்றும். இந்த மூக்கிரட்டை கீரையானது கல்லீரலின் செயல்பாட்டைத் தூண்டிவிட்டு, வேகமாகவும் துரிதமாகவும் செயல்பட உதவுகிறது. சிறுநீர்ப்பாதை தொற்று சிறுநீர்ப்பாதை தொற்று சிறுநீர்ப் பாதை தொற்று பெண்களுக்கு மிகச் சாதாரணமாக வந்துவிடக் கூடிய பிரச்சினையாக இருக்கிறது. ஆண்களுக்கும் வரும். ஆனால் அளவில் பெண்களுக்கு அதிகம். இது நிறைய அசௌகரியத்தைக் கொடுக்கும். பிறப்புறுப்புப் பகுதியில் அரிப்பு, எரிச்சல், நுண் தொற்றுக்கள், பாக்டீரியாக்கள் உள்ளே செல்லுதல் போன்ற பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதிலும் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இந்த பிரச்சினை அதிகமாகவே இருக்கும். அந்த சமயங்களில் மூடு இந்த கீரை எடுத்துக் கொள்ளலாம். எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது. MOST READ: இந்திய கிரிக்கெட் வீரர்களோட மனைவிகள் திருமணத்துக்கு முன்பு என்ன வேலை செஞ்சாங்கனு தெரியுமா? உடல்பருமன் உடல்பருமன் எடையைக் குறைக்க, கொழுப்பை கரைக்க நாமும் என்னென்னவோ செய்து பார்க்கிறோம். சாப்பிடுகிறோம். ஆனால் ஒன்றும் பயனளிப்பதில்லை. எடை குறைப்பற்கு நாமும் கடைகளில் வாங்கிப் பயன்படுத்தும் என்ன ஆயுர்வுத சித்த மருந்துகளானாலும் அதில் இந்த மூக்கிரட்டையும் நிச்சயம் உட்பொருளாக இருப்பதை உங்களால் பார்க்க முடியும். உடம்பில் உள்ள அதிகப்படியான கழிவுகளை நீக்கி, உடலுக்கு ஆற்றலைத் தரக்கூடிய பொட்டாசியம், எலக்ட்ரோலைட்ஸ்களை சேமித்து எடையைக் குறைக்க உதவுகிறது. சிறுநீர்கடுப்பு சிறுநீர்கடுப்பு சிறுநீர் கழித்தல் என்பது உடலின் செயல்பாடுகளில் மிக முக்கியமானது. ஏனென்றால் நம் உடலில் அதிகப்படியாக இருக்கிற கழிவுகள், தண்ணீர், கொழுப்பு ஆகியவற்றைக் கரைத்து வெளியேற்றி விடும். ஆனா்ல சிலருக்கு அடிக்கடி சிறுநீர்க்கடுப்பு ஏற்பட்டு சிறுநீர் கழிக்கவே சிரமமாகிவிடும். அதிலும் கோடை காலத்தில் நீர்க்கடுப்பு அதிகமாகவே இருக்கும். அதைத் தடுத்து சிறுநீர் மென்மையாக வெளியேற்றுவதற்கு இந்த மூக்கிரட்டை பயன்படுகிறது. நீரிழிவு நீரிழிவு இன்றைய காலக்கட்டத்தில் 100க்கு 70 சதவீதம் பேருக்கு நீரிழிவு பிரச்சினை இருக்கிறது. இந்த நீரிழிவை முறையாகக் கட்டப்பாட்டுக்குள் வைக்கவில்லை என்றால் அது மிகப்பெரிய ஆபத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். ஆனால் இந்த மூக்கிரட்டை இலையில் இருக்கும் சாறு நம்முடைய ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. அதோடு நமக்குத் தேவையான பிளாஸ்மா இன்சுலின் அளவை அதிகரிக்கச் செய்து, நீரிழிவு நோயைத் தடுக்கிறது. கண்ணுக்கு நல்லது கண்ணுக்கு நல்லது பொதுவாகவே கீரைகள் கண் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று நமக்குத் தெரியும். அதிலும் இந்த மூக்கிரட்டை கீரை கண் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகளைத் தீர்க்கிறது. குறிப்பாக, இந்த செடியின் வேர்ப்பகுதியை இடித்து, அந்த சாறினை ஜூஸ் போல குடித்து வந்தால், மாலைக்கண் நோய் போன்ற பல பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். MOST READ: மனிதனுக்கு திடீர்னு மரணம் வருவது எதனால்? அதை எப்படி தவிர்க்கலாம்? இதயக் கோளாறுகள் இதயக் கோளாறுகள் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் இருந்து மூக்கிரட்டை வேர் நம்மை காப்பாற்றும். ஏனென்றால் இது இதயத்துக்குச் செல்லும் அழுத்தத்தைத் தவிர்க்கும். மூட்டுவலி மூட்டுவலி பெரும்பாலும் இப்போதெல்லாம் இளம் வயதிலேயே மூட்டுவலி பாடாகப் படுத்துகிறது. இந்த மூக்கிரட்டை இலையை மை போல அரைத்து மூட்டுப் பகுதிகளில் பற்று போடுங்கள். ஒரே வாரத்தில் உங்களுடைய மூட்டுவலி எப்படி பறந்து போகுதுனு பாருங்க. வயிற்றுப் பிரச்சினைகள் வயிற்றுப் பிரச்சினைகள் வயிற்றுப் பிரச்சினைகள், ஜீரணக் கோளாறு, வயிற்றுப் புழுக்கள் போன்ற அனைத்து பிரச்சினைகளையும் சரிசெய்து விடும் ஆற்றல் இந்த மூக்கிரட்டை கீரைக்கு உண்டு. MOST READ: நீங்களே நினைச்சு பார்க்காத அளவு டக்குனு வெயிட் குறையணுமா? அதுவும் ஆரோக்கியமா? இதோ பக்க விளைவுகள் பக்க விளைவுகள் பெரும்பாலான உணவுப் பொருள்களில் பக்க விளைவுகள் இருக்கத் தான் செய்யும். எதுவாக இருந்தாலும் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சாகத்தானே மாறும். அவ்வளவெல்லாம் இந்த கீரைக்கு பயப்பட வேண்டும். இதிலும் சின்ன சின்ன பக்க விளைவுகள் உண்டு. ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். அதனால் இதயத் துடிப்பில் சிறிது மாற்றம் ஏற்படலாம். எத்தனால் அழற்சி இருக்கிறவர்கள் இந்த கீரையை பயன்படுத்தாதீர்கள். அதேபோல் கர்ப்பிணிப் பெண்கள், பால் கொடுக்கும் தாய்மார்கள் மற்றும் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்த கீரையைக் கொடுக்காமல் இருப்பது நல்லது.

Read more at: https://tamil.boldsky.com/health/herbs/2019/amazing-health-benefits-of-punarnava/articlecontent-pf184596-025219.html

Thursday, March 21, 2019

மரங்களும் அதன் தெய்வீக சக்திகளும்

மரங்களும் அதன் தெய்வீக சக்திகளும்



துளசி
         துளசி விஷ்ணுவின் அம்சமாகும். துளசியின் இன்னொரு பெயர் பிருந்தா, பிருந்தாவனம் உள்ள இடத்தில் கண்டிப்பாக விஷ்ணு குடியிருப்பார். அதனால் வீடுகளில் முற்றத்தில் துளசி மாடம் அமைக்கப்படுகிறது. துளசிக்கு பல மருத்துவ குணங்களும் உண்டு. இதிலிருந்து வெளிப்படும் தெய்வீக அதிர்வுகள் பல நோய்களை குணமாக்கும்.

சந்தன மரம்
  சந்தனமரம் விஷ்ணுவின் அம்சமாகும். சந்தனம் சுபகாரியங்களிலும், பூஜைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து தெய்வீக அதிர்வுகள் வெளிபடுகின்றன. இவ்வதிர்வுகள் மன அமைதியையும், சாத்வீக குணத்தையும் கொடுக்கும்.

அத்திமரம்
                அத்தி மரம் தத்தாத்திரேயரின் அம்சமாகும். விஷ்ணுவும் இதில் குடியிருப்ப்பார். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் அல்லது காந்த அலைகள் சாத்வீக குணமுடையவை. மனசாந்தியை கொடுக்கக்கூடியவை. இம்மரத்தில் அடியில் அமர்ந்து தியானம் செய்தால் எளிதாக கைகூடும்.

மாமரம்
               மாமரம் மகாலட்சுமியின் அம்சமாகும். இம்மரத்தில் இருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இதன் காரணத்தினாலேயே எல்லாவிதமான பூஜைகளிலும் மாவிலைகள் பயன்படுத்தபடுகின்றன. சுபகாரியங்கள் செய்யும்  போது வீடுகளில் மாவிலைகள் தோரணமாக கட்டி தொங்க விடப்படுகிறது.

அரசமரம்
              அரசமரம் பிரம்மாவின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வழிபாடும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கிழே தீபம் ஏற்றி வர புத்திர தோஷம் நீங்கும்.

ஆலமரம்
                 ஆலமரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கிழே அமர்ந்து தியானம் செய்தால் தியானம் எளிதாக கைகூடும். அம்மரத்தின் விழுதுகள் ஆண்மை குறைவை நீக்கும் தன்மையுடையது.

மருதாணிமரம்
                 மருதாணி மரமானது லட்சுமியின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் பழங்களை தூங்கும் போது தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் கேட்ட கனவுகள் வராது.

ருத்ராஷ  மரம்
                ருத்ராஷ மரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. ருத்ராஷ கோட்டையை  உடலில் அணிந்து கொண்டால் இரத்தம் சுத்தமாகும். இரத்த அழுத்தம் சீராகவும் கோபம் குறையும். மனதில் சந்தம் உண்டாகும்.

ஷர்ப்பகந்தி
                 இம்மரத்தின் அருகே பாம்புகள் வராது. இம்மரத்தின் குச்சிகள் உடலில் கட்டி கொண்டால் பாம்புகள் தீண்டாது.

நெல்லி மரம்
                   நெல்லி மரம் விஷ்ணுவின் அம்சமாகும். இம்மரத்தின் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கிழே தம்பதிகளை அமரவைத்து அன்னதானம் செய்தால், அன்னதானம் செய்பவருடைய சகல பாவங்களும் நீங்கும்.

வில்வமரம்
                    வில்வமரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்தின் இலைகளால்  சிவனை பூஜிக்க சகல பாவங்களும் நீங்கும்.

வேப்பமரம்
                     வேப்பமரம் சக்தியின் அம்சமாகும். இம்மரத்தின் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தை சுற்றி மஞ்சள் குங்குமம் பூசி மங்கள் ஆடைகளை கட்டி மாலை சூடி மரத்தை வலம் வந்து வணங்கி வர சக்தியின் அருள் கிட்டும்.

கருவேல மரம்
                  கருவேல மரம் தீய அதிர்வுகளை வெளிபடுத்தும் இம்மரத்தின் காய் மற்றும் வேர்களை மந்திரவாதிகள் தவறான காரியங்களுக்கு பயன்படுத்துகிறார்கள். பொதுவாக பேய், பிசாசுகள் இம்மரத்தின் மீதுதான் குடியிருக்கும்.

காட்டுமரம்
                   காட்டு வேம்பு பிரம்மாவின் அம்சமாகும். ஒரு சிலர் இதை விஷ்ணும் அம்சம் என கூறுவர். இம்மரம் சாத்வீக அதிர்வுகளை வெளிபடுத்தும்.

அசோக மரம்
                     அசோக மரம் சாத்வீக அதிர்வுகளை வெளிப்படுத்தும்.

புளிய மரம்
                    புளியமரம் தீய அதிர்வுகளை வெளிபடுத்தும். புளிய மரத்தின் நிழல் நோய்களை உண்டாகும். புளிய மரங்களில் பேய், பிசாசுகள் தங்கி இருக்கும் என்பது நம்பிக்கை.

மாதுளம் மரம்
                     மாதுளை மரம் லட்சுமியின் அம்சமாகும். இம்மரத்தின் வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கிழே விளகேற்றி தம்பதிகளால் வலம் வர தம்பதிகளிடையே அன்னியோன்யம் ஏற்படும்