Sunday, March 29, 2020

வாரம் இருமுறை பப்பாளிபழம் சாப்பிட்டு வந்தால் உண்டாகும் நன்மைகள்...!!

வாரம் இருமுறை பப்பாளிபழம் சாப்பிட்டு வந்தால் உண்டாகும் நன்மைகள்...!!

Pappali fruit

பப்பாளி இலை, பப்பாளி காய், பப்பாளி பழம் என அனைத்து பாகங்களும் நமக்கு பயனுள்ளதாக இருக்கிறது. கண்களில் உண்டாகும் பாதிப்புகளை சரி செய்ய பப்பாளி பழம் மிகவும் பயன்படுகிறது.

பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்களின் உடல் வளர்ச்சியில் நல்ல மாற்றம் உண்டாகும். பப்பாளி எலும்புகளை வலுப்படுத்துகிறது. 
 
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வரம் ஒரு முறை பப்பாளி காயை சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைந்து நல்ல உடல் ஆரோக்கியத்தை  பெற முடியும்.
 
நரம்பு தளர்ச்சி பிரச்னையை போக்க தினமும் காலையில் நன்கு பழுத்த பப்பாளி பழத்தை தேனில் தோய்த்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குறைபாடு  சீக்கிரத்திலேயே நீங்கும்.
 
பப்பாளி பழம் ஆண்களின் உடலில் உயிரணுக்களை பெருக்கும் திறன் கொண்டதாகும். இதை சாப்பிடும் ஆண்களுக்கு விந்தணுக்கள் பெருக்கம் ஏற்பட்டு  மலட்டுத்தன்மை நீங்கும்.
 
வாரம் இருமுறை பப்பாளி சாப்பிட்டு வந்தால் உடலில் தொற்று நோய் பாதிப்பு ஏற்படாது. மலச்சிக்கல் இருப்பவர்கள் மூலநோய் குறைபாடு உள்ளவர்கள் தினமும்  ஒரு பப்பாளி பழம் சாப்பிட்டு வந்தால் அந்த குறைபாடுகளில் இருந்து விடுபடலாம்.
 
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க பப்பாளி பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும். கல்லீரல் வீக்கம் உள்ளவர்கள் பப்பாளி காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வீக்கம் குறைந்து விடும்.
 
பப்பாளிப் பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி நோய் விரைவில் குணமாகும்.

வெறும் வயிற்றில் நல்லெண்ணெய் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்...!

வெறும் வயிற்றில் நல்லெண்ணெய் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்...!

Sesame Oil

நல்லெண்ணெயை சமையலிலும் சேர்க்கலாம் அல்லது காலையில் வெறும் வயிற்றில் 1 டீஸ்பூன் குடித்தும் வரலாம். இப்போது நல்லெண்ணெயை எடுத்துக் கொள்வதன் மூலம் பெறும் நன்மைகளைப் பற்றிப் பார்ப்போம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, உணவில் நல்லெண்ணெய்யை சேர்க்க தவறாதீர்கள்.

மலச்சிக்கல்: நல்லெண்ணெயை காலையில் வெறும் வயிற்றில் சிறிது குடித்தால், குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.
 
கெட்ட கொழுப்பு: நல்லெண்ணெய்யில் லெசித்தின் என்னும் பொருளும், லினோலிக் என்னும் அமிலமும் இருப்பதால், இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கெட்ட  கொழுப்பைக் கரைத்து(LDL), நல்ல கொழுப்பின் (HDL)அளவை அதிகரிக்கும்.
 
உடலுக்கு குளிர்ச்சி: உடல் சூட்டினால் அவஸ்தைப்படுபவர்கள், நல்லெண்ணெயை சிறிது குடித்தால், உடல் வெப்பம் தணிந்து, உடல் குளிர்ச்சியுடன் இருக்கும்.
 
இரத்த அழுத்தம்: நல்லெண்ணெயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளதால், இவை இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.  குறிப்பாக நல்லெண்ணெய் குடிப்பதால், இரத்த அழுத்த மருந்துகளை நாளடைவில் குறைத்துவிடலாம்.
 
நல்லெண்ணெயில் கால்சியம் மற்றும் ஜிங்க் வளமாக இருப்பதால், தினமும் சிறிது நல்லெண்ணெயை வெறும் வயிற்றில் குடித்தால், ஆஸ்டியோபோரோசிஸ்  என்னும் எலும்புப்புரையின் தாக்கம் குறைந்து, எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும்.
 
மூட்டு வலிகள்: மூட்டு வலிகளால் கஷ்டப்படுபவர்கள், நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதன் மூலமோ அல்லது குடிப்பதன் மூலமோ குணப்படுத்தலாம்.
 
பல் பிரச்சனைகள்: நல்லெண்ணெயில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மையினால், இந்த எண்ணெயைக் தினமும் காலையில் வாயில் சிறிது ஊற்றி, 10 நிமிடம் கொப்பளித்து, வர வேண்டும். இப்படி செய்து வந்தால், பல் வலி, ஈறு பிரச்சனைகள் போன்றவை நீங்கி வாய் ஆரோக்கியம் மேம்படும்.

நீரிழிவு பிரச்சனையில் இருந்து நிவாரணம் தரும் வெந்தயம்...!!

நீரிழிவு பிரச்சனையில் இருந்து நிவாரணம் தரும் வெந்தயம்...!!

Fenugreek

நீரிழிவு நோயாளிகள் தினமும் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம். மேலும் ஆய்வுகளிலும் வெந்தயத்தை சாப்பிடுவதால் டைப்-2 நீரிழிவு பிரச்சனையில் இருந்து நல்ல தீர்வு கிடைப்பதாக தெரிய வந்துள்ளது.

மாரடைப்பு வெந்தயம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இது மாரடைப்பினால் இதயம் தீவிரமாக பாதிக்கப்படுவதைத் தடுத்து நல்ல பாதுகாப்பு வழங்கும்.  இதற்கு வெந்தயத்தை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வேண்டும்.
புற்றுநோய் ஆய்வுகளில் வெந்தயத்தில் உள்ள சக்தி வாய்ந்த சத்துக்கள், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடுவதாக தெரிய வந்துள்ளது. எனவே உங்களுக்கு  புற்றுநோய் வராமல் இருக்க வேண்டுமானால், வெந்தயத்தை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொள்ளுங்கள்.
உடல் சூடு கோடையில் உடலில் அதிகம் சூடு பிடிக்கும். இதனைத் தடுக்க தினமும் காலையில் வெந்தயத்தை சாப்பிட வேண்டும். இதனால் உடல் குளிர்ச்சி  அடைந்து, உடல் சூடு பிடிப்பது தடுக்கப்படும்.
செரிமானம் செரிமான பிரச்சனைகள் ஏதும் நேராமல் இருக்க வேண்டுமானால், வெந்தயத்தை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். இதனால் செரிமான  கோளாறுகள், வாய்வுத் தொல்லை போன்றவை நீங்குவதோடு, மலச்சிக்கல், வயிற்று அல்சர் போன்றவைகளும் தடுக்கப்படும்.
எடை குறையும் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், தினமும் காலையில் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம், கெட்ட கொலஸ்ட்ரால் கரைந்து, உடல் எடையும் வேகமாக குறையும்.
சிறுநீரக செயல்பாடுகள் வெந்தயத்தில் உள்ள பாலிஃபீனோலிக் ஃப்ளேவோனாய்டுகள், சிறுநீரகங்களின் செயல்பாட்டை அதிகரித்து, சிறுநீரக நோய்கள் வராமல்  தடுக்கும். எனவே சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிடுங்கள்.

Monday, March 16, 2020

நாள்பட்ட மலச்சிக்கலையும் குணமாக்க உதவும் அத்திப்பழம்...!!

நாள்பட்ட மலச்சிக்கலையும் குணமாக்க உதவும் அத்திப்பழம்...!!

Figs

அத்திமரம் மிகவும் மருத்துவ குணம் நிறைந்தது. இதன் இலை , பிஞ்சு ,காய் , பழம் , பால், பட்டை போன்ற அனைத்து பாகங்களும் ஆரோக்கிய பலன்களை அள்ளி வழங்கும் தன்மை கொண்டன. இந்த பழங்கள் மிகவும் சுவையானது மற்றும் ஆரோக்கியமானது. 
அத்திப் பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. அதனால் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. நார்ச்சத்தும் அதிகமுள்ளதால்  உடல்பருமனை குறைக்கிறது.
 
அத்திப் பழம் ஓர் ஒப்பற்ற மலமிளக்கியாகும் உலர்ந்த அத்திப் பழங்களை இரவு தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் பழத்தை சாப்பிட்டு அந்த ஊற வைத்த தண்ணீரையும் குடிக்க எத்தனை கடினமான மலமும் இறுகி வெளியேறும்.
 
பழங்களில் மிகுந்த மருத்துவ குணம் கொண்டது, அத்திப்பழம். மேலும் இவை வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர  உதவுகிறது.
 
அத்தி பழங்களில் விட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளன. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி, வைட்டமின் கே பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, காப்பர், ஜிங்க் என பல வைட்டமின்கள் நிறைந்துள்ளன. 
 
மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். நாள்பட்ட மலச்சிக்கலைக் குணமாக்க 5 பழங்களை  இரவில் சாப்பிட வேண்டும்.
 
அத்திப் பழத்தைச் சாறு பிழிந்து அதனுடன் தேன்கலந்து சாப்பிட்டால் மூலநோயைக் குணப்படுத்தலாம். உலர்ந்த அத்திப் பழங்களை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் அளவற்ற போஷாக்கை பெறலாம். உலர்த்திப் பொடி செய்து ஒரு ஸ்பூன் வீதம் பாலில் போட்டும் சாப்பிடலாம்.
 
போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப் பழங்களைக் வினிகரில் ஒருவாரம் வரை  ஊற வைத்து அதனைத் தினமும் இரண்டு பழங்கள் வீதம் ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குணமாகும்.

வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்ற உதவும் சுண்டைக்காய்....!

வயிற்றில் உள்ள பூச்சிகளை வெளியேற்ற உதவும் சுண்டைக்காய்....!

turkey berry

சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன. இதனால் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். உடற்சோர்வு நீங்கும்.இதனை பச்சையாக பறித்து தொக்கு செய்தோ, கூட்டு  செய்தோ சாப்பிடலாம்.
சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வயிற்றுக் கிருமிகள் உள்ளவர்கள் வாரம் மூன்று முறை சுண்டைக்காய் சாப்பிட்டு வந்தால் வயிற்றுக் கிருமி, மூலக் கிருமி போன்றவை  அகலும். வயிற்றுப்புண் ஆறும். வயிற்றின் உட்புறச் சுவர்கள் பலமடையும்.
 
சுண்டைக்காயில் காட்டுச் சுண்டை, நாட்டுச் சுண்டை என இருவகை உண்டு. மலைக்காடுகளில் தானாக வளர்ந்து அதிகம் காணப்படுவது மலைச்சுண்டை. இவை பெரும்பாலும் வற்றல் செய்யப் பயன்படுகிறது. இவை மலச்சிக்கலைப் போக்கி அஜீரணக் கோளாறுகளை நீக்கும்.  வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். குடற்புண்களை ஆற்றும்.
 
பால் சுண்டைக் காயைச் சமைத்து உண்ணக் கபக்கட்டு, ஈளை, காசம், இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, திமிர்ப்பூச்சி வெளியேறும். சுண்டைக்  காயை உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து காயவைத்து எண்ணெயில் வறுத்து உணவில் இரவில் பயன்படுத்தி வர மார்புச்  சளி, இரைப்பிருமல், காச நோய் குணமாகும். வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.
 
சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளை ஓடு, மாம் பருப்பு, கறிவேம்பு, சீரகம் சம அளவாக எடுத்து வறுத்து இடித்துப் பொடியாக்கி 2 வேளை ஒரு சிட்டிகையளவு 1 டம்ளர் மோரில் கலந்து குடித்து வர பேதி, மூலம், பசியின்மை, மார்புச் சளி  குணமாகும்.

சளியை முற்றிலும் விரட்டும் தூதுவளை துவையல் செய்ய...!

சளியை முற்றிலும் விரட்டும் தூதுவளை துவையல் செய்ய...!

Thuthuvalai Thuvaiyal

தேவையான பொருட்கள்:
 
தூதுவளைக் கீரை - 3 கப்
உப்பு - தேவைக்கேற்ப
காய்ந்த மிளகாய் 3
உளுந்து - 3 ஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
பெருங்காயம் - 2 சிட்டிகை
நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்

செய்முறை: 
 
முதலில் தூதுவளைக் கீரையை அதிலுள்ள முட்களை நீக்கி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். முதலில் சிறிதளவு எண்ணெயில் கீரையை வதக்கவும். பிறகு  அதே கடாயில் உளுந்தையும் வத்தல் மிளகாயையும் தனித்தனியே வறுக்கவும்.

Thuthuvalai

தூதுவளை கீரை, உளுந்து, மிளகாயுடன் புளி, உப்பு, பெருங்காயம் சேர்த்து லேசா தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைக்கவும். பின்பு பரிமாறவும். சுவையான ஆரோக்கியம் நிறைந்த தூதுவளை துவையல் தயார்.
 
குறிப்பு: இந்த துவையலுடன், 2 பல் பூண்டு, தேவைப்பட்டால் இஞ்சி ஒரு துண்டு, சிறிதளவு மிளகு சீரகம் சேர்த்தும் துவையல் அரைக்கலாம்.