Monday, March 29, 2021

தினமும் ஒரு துண்டு பூண்டு சாப்பிட்டால் உடலினுள் நிகழும் அற்புதங்கள் என்னென்ன தெரியுமா?

மிகவும் கவர்ச்சியாக மாறுவீர்கள் 
                ஆண்கள் தினமும் பூண்டு சாப்பிட்டால், அது அவர்களின் கவர்ச்சியை அதிகரிக்கும். இருப்பினும் பூண்டு சாப்பிட்டால், அதன் வாசனை பேசும் போது ஒருவித மோசமான நாற்றத்தை உண்டாக்கும் என்ற ஒரு கருத்து மக்களிடையே உள்ளது. ஆனால் சமீபத்திய ஆய்வில் அது தவறு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளன. பெண்ணைக் கவர ஒரு ஆண் 2 பல் பூண்டு சாப்பிட்டால் போதும். அதுவும் அந்த ஆண் ஒரு பெண்ணுடன் டேட்டிங் செல்வதற்கு 12 மணி நேரத்திற்கு முன்பு சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்தால், ஆணின் உடல் வாசனை பெண்களை அதிகம் கவரும். இருந்தாலும், இந்த நிகழ்வை விஞ்ஞானிகள் விளக்குவது சற்று கடினம். ஒருவேளை இதற்கு காரணம் அதில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள், வியர்வையால் ஏற்படும் நாற்றத்தைக் கட்டுப்படுத்துவதாக இருக்கலாம்.
 
 
 மிகவும் கவர்ச்சியாக மாறுவீர்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
நோயெதிர்ப்பு சக்தி மேம்படும் 
 
            பூண்டு பல்வேறு கிருமிகளில் இருந்து பாதுகாப்பளிக்கும். நம் பாட்டிமார்கள் சளி பிடித்திருக்கும் போது கூட பூண்டு சாப்பிட கூறுவதைக் கேட்டிருப்போம். ஆனால் தினமும் பூண்டு சாப்பிட்டு வந்தால், அது குளிர்காலத்தில் சந்திக்கும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்கலாம். ஏனெனல் இதில் ஏராளமான அளவிலான வைட்டமின்கள், நன்மை பயக்கும் எண்ணெய்கள் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன. மேலும் இதில் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளை அழிக்கும் அல்லிசின் என்னும் ஆர்கானிக் கலவை உள்ளது. ஆகவே தினமும் பூண்டு சாப்பிடுவது ஒருவரது நோயெர்ப்பு சக்தியை வலுவாக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் கொள்ளத் தேவையில்லை.
 
நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்
 
 
இரத்த அழுத்தம் கட்டுப்படும் 
 
                உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் அன்றாட உணவில் பூண்டு சேர்த்து வாருங்கள். இது இரத்த நாளங்களை விரிவடையச் செய்து, தமனி சார்ந்த அழுத்தத்தைக் குறைக்கும். எனவே உயர் இரத்த அழுத்தத்தை குணப்படுத்த, தினமும் 4 பல் பூண்டு சாப்பிட வேண்டும். மேலும் பூண்டு இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை 10-15% குறைக்கிறது. ஒருவரது இரத்த அழுத்தம் குறைந்தால், அது இதய நோய் அல்லது பக்கவாதம் வருவதற்கான ஆபத்தை இருமடங்காக குறைக்கும். இருப்பினும் உயர் இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சை அளிக்க பூண்டு சாப்பிடுவதற்கு முன் உங்கள் மருத்துவரைக் கேட்டுக் கொள்ளுங்கள்.

இரத்த அழுத்தம் கட்டுப்படும்


நினைவாற்றல் மேம்படும் 
         
        ஒரு கோட்பாட்டின் படி, மனித உடல் மற்றும் மூளை வயதாகும் போது வேதியியல் ஆக்ஸிஜனேற்ற எதிர்வினை காரணமாக நாம் உண்ணும் உணவு மற்றும் ஆக்ஸிஜனை உட்கொண்டு, ஆற்றலை உற்பத்தி செய்கிறோம். ஆனால் இந்த செயல்முறை செல்களை அழிக்கிறது மற்றும் காலப்போக்கில் தோலை சுருங்கச் செய்து, மூளை கூர்மையாக இருப்பதை நிறுத்துகிறது. பூண்டில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், அதிகப்படியான ஆக்ஸிஜனேற்றத்திற்கு எதிராக போராடுகின்றன மற்றும் இளமையைப் பராமரிக்க உதவுகின்றன. மொத்தத்தில் பூண்டு வயதான காலத்தில் ஞாபக மறதியின் அபாயத்தைக் குறைக்கும். மேலும் தினமும் பூண்டு சாப்பிடுவது, நினைவாற்றலை மேம்படுத்தி, மூளையின் உற்பத்தித்திறனை அதிகரிக்கும். எனவே உங்கள் மூளை சிறப்பாக செயல்பட பூண்டு உதவி புரியும்.
நினைவாற்றல் மேம்படும்


ஸ்டாமினா அதிகரிக்கும்
 
 
 
         பூண்டு இதயம் மற்றும் தசைகளை திறம்பட செயல்பட வைக்கிறது. நீங்கள் விளையாட்டு வீரராக இருந்தால், தினமும் பூண்டு சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். பண்டைய கிரேக்கத்தில், ஒலிம்பிக் விளையாட்டு வீரர்களுக்கு பூண்டு வழங்கப்பட்டது. ஏனெனில் இது அவர்களை போட்டியாளர்களை விட சிறப்பாக செயல்பட வைத்தது. எனவே தினமும் பூண்டு சாப்பிடுவது உடலின் ஸ்டாமினாவை அதிகரிக்கும் 
 
 
சருமம் மற்றும் தலைமுடி மேம்டும் 
 
 
            பூண்டு தலைமுடியின் வளர்ச்சி மற்றும் அடர்த்தியை மேம்படுத்துகிறது. வழுக்கைத் தலை உள்ளவர்கள், பூண்டு பற்களை அரைத்து தலையில் தடவி பின், குளிர்ந்த நீரால் தலைமுடியை அலசவும். வேண்டுமானால் பூண்டு எண்ணெயைப் பயன்படுத்தலாம். மேலும் தினமும் பூண்டு சாப்பிடுவது சருமத்தில் கொலாஜன் அளவு மற்றும் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கும்.
 
 
 
பல் வலி குறையும் 
பல் வலி குறையும்
 
 
            பூண்டில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், இது சொத்தை பற்களை எதிர்த்துப் போராடுவதில் சிறந்தது. ஏனெனில் இதில் உள்ள மருத்துவ பண்புகள், ஈறுகள் மற்றும் பற்களை பாதிக்கும் கிருமிகளை அழித்து, ஈறுகளில் உள்ள அழற்சியை குணப்படுத்துகிறது. முக்கியமாக பூண்டு சொத்தைப் பற்களின் அபாயத்தைக் குறைக்கும். எனவே உங்கள் பற்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென நினைத்தால், தினமும் பூண்டு சாப்பிட ஆரம்பியுங்கள்.


ஒல்லியாக ஆரம்பிப்பீர்கள் 
 
ஒல்லியாக ஆரம்பிப்பீர்கள்
 
 
             உடல் பருமனால் அவதிப்படுபவர்கள், உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைக்க பூண்டு சாப்பிடுவது நல்லது. எப்படியெனில் பூண்டை சாப்பிடும் போது உடலில் நிகழும் சிக்கலான இரசாயன எதிர்விளைவுகளின் விளைவாக, அஜோன் செயல்படுத்தப்பட்டு இரத்தத்தில் புளிப்பை உண்டாக்கி, கொழுப்பு படிவுகளை அழிக்கிறது. தினமும் பூண்டு சாப்பிடும் போது, தேவையற்ற உடல் பருமனைத் தடுக்கிறது. எனவே நீங்கள் ஒல்லியாக விரும்பினால், தினமும் பூண்டு சாப்பிடுங்கள்.


Wednesday, September 16, 2020

தினமும் மதியம் ஒரு டம்ளர் பெருங்காயத் தூள் கலந்த நீரைக் குடிப்பதால் பெறும் நன்மைகள்!

 

பெருங்காயத்தின் ஊட்டச்சத்து பற்றி பேசுகையில், இந்த சக்தி வாய்ந்த மசாலாப் பொருளில் நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, நியாசின், கரோட்டின் மற்றும் ரிபோஃப்ளேவின் ஆகியவை அடங்கியுள்ளது. அதோடு இதில் ஆன்டி-வைரல், ஆன்டி-பாக்டீரியல் பண்புகளையும் கொண்டுள்ளதால், நிவாரணப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்த மசாலாவில் ஆன்டிகோகுலண்ட் பண்புகள் உள்ளன மற்றும் இது ஒரு நீர்ப்பெருக்கியும் கூட. இப்படி பல அற்புதமான நன்மைகளைக் கொண்டுள்ளதால், ஆயுர்வேதத்தில் இது ஒரு முக்கிய மருத்துவ பொருளாக பயன்படுத்தப்படுகிறது.



செரிமான பிரச்சனை நீங்கும்  :-
 
பெருங்காயத் தூளை நீரில் கலந்து குடிப்பதால், அதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், மற்றும் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு பொருட்கள் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் அசிடிட்டியைத் தடுக்க உதவுகின்றன.



எலும்புகள் வலுபெறும்
 
 
 நீரில் பெருங்காயத்தைக் கலந்து தினமும் குடிப்பது, எலும்புகளை வலிமையாக்க உதவுகின்றன. பெருங்காயத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ஆரோக்கியமான பற்கள் மற்றும் வலுவான எலும்புகளுக்கு வழிவகுக்கின்றன.



இரத்த சோகையை எதிர்க்கும்
 
 பெருங்காயத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலில் இரத்த சோகைக்கு எதிரான ஒரு பாதுகாப்பு வளையத்தை அமைக்க உதவுகின்றன. மேலும் இதில் உள்ள ஆன்டி-கார்சினோஜெனிக் பொருட்கள், புற்றுநோயைத் தடுக்கின்றன.
 
 
சர்க்கரை நோய்க்கு நல்லது 
 
மஞ்சள் நிற பெருங்காயத் தூளை நீரில் கலந்து குடிக்கும் போது, இரத்த அழுத்தம் சீராகிறது. அதோடு இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி, சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்கிறது. 
 
 
ஆஸ்துமா ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்கள், பெருங்காயத் தூளை சுடுநீரில் கலந்து குடித்தால், அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், ஆஸ்துமாவைத் தூண்டும் பாக்டீரியாக்களை அழித்து, ஆஸ்துமாவைத் தடுக்கும்.


கண்களுக்கு நல்லது பெருங்காயத்தில் பீட்டா-கரோட்டின் உள்ளது. இது கண்களின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுவதோடு, கண்கள் வறட்சியடைவதையும் தடுக்கின்றன. நீங்கள் கணினி முன் அதிக நேரம் செலவிடுபவராயின், தினமும் நீரில் பெருங்காயத் தூளை கலந்து குடியுங்கள்.


சுவாச கோளாறுகளைக் கட்டுப்படுத்தும் பெருங்காயத் தூளை ஒருவர் தினமும் சுடுநீரில் கலந்து குடிப்பதன் மூலம், சுவாசக் கோளாறுகளை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடியும். முக்கியமாக குளிர்காலத்தில் அடிக்கடி சளி பிடிக்காமல் இருக்க, பெருங்காயத்தை நீரில் கலந்து குடிப்பது நல்ல பாதுகாப்பை வழங்கும்.

வலி நிவாரணி பெருங்காயத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வலி நிவாரண பண்புகள் உள்ளதால், உடல் வலியில் இருந்து மட்டுமின்றி, தலைவலி, ஒற்றைத் தலைவலியில் இருந்தும் நல்ல நிவாரணத்தை அளிக்கும்.

மன அழுத்த நிவாரணி 
 
 உங்கள் மனநிலையில் அடிக்கடி ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு, நீங்கள் மன அழுத்தம் அல்லது மனச் சோர்வை உணர்ந்தால், பெருங்காயத் தூளை சுடுநீரில் கலந்து குடியுங்கள். இதனால் அதில் உள்ள மன இறுக்க நிவாரண பண்புகள், நல்ல மனநிலையைப் பெற உதவி, மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும்.


Tuesday, June 2, 2020

பூண்டு மற்றும் தேன்

 
 
 
பூண்டு மற்றும் தேன்

 பூண்டு மற்றும் தேன்
 
 
 
பூண்டு மற்றும் தேன் பூண்டு உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்கும் பொருள் என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் தொப்பை மற்றும் உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால், 2-3 பற்கள் பூண்டை நன்கு மென்மையாக நசுக்கி, அத்துடன் 2 டீஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரைக் குடிக்க வேண்டும். இப்படி சில வாரங்கள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் உட்கொண்டு வந்தால், உடல் எடை குறைவதை நன்கு காணலாம்.

 

உங்க வயிறு 'பானை' போல அசிங்கமா இருக்கா? அப்ப 2 ஸ்பூன் தேனை தினமும் இப்படி சாப்பிடுங்க...

 
 
 எலுமிச்சை மற்றும் தேன் 
 
 
 
 
 
 
 
எலுமிச்சை மற்றும் தேன்எலுமிச்சை மற்றும் தேன் எலுமிச்சை உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் பொருள் என்பது அனைவரும் அறிந்ததே. நீங்கள் உடல் தொப்பை வேகமாக குறைக்க விரும்பினால், ஒரு எலுமிச்சையை சாறு எடுத்து, ஒரு டம்ளர் நீரில் அதை சேர்த்து, 2 டீஸ்பூன் தேன் கலந்து குடியுங்கள். அதுவும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடியுங்கள். இந்த பானம் நிச்சயம் வேகமாக உங்கள் தொப்பையில் ஒரு மாற்றத்தை உண்டாக்கும்.

Monday, April 6, 2020

வீட்டில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் அனைத்தையும் நீக்கும் பரிகாரம்...!!

வீட்டில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் அனைத்தையும் நீக்கும் பரிகாரம்...!!


வீட்டில் தீய சக்திகள் இருந்தாலே அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு அடிக்கடி உடல்நல குறைபாடுகள், வீட்டில் அடிக்கடி பிரச்சனைகள், மனசஞ்சலங்கள் வருவது  உறவுகளுக்கிடையே பல்வேறு பிரச்சினைகள் போன்றவை வந்து கொண்டேயிருக்கும். இப்பிரச்சினைகளை உருவாக்கக்கூடிய தீய சக்திகளை வெளியேற்ற சில  வழிகள்.

கடல் உப்பை நீரில் கலந்து அந்த உப்பு நீரால் வீட்டை முழுக்க கழுவ வேண்டும். இது வீட்டில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் அனைத்தையும் நீக்கி விடும். மேலும் குளிப்பதற்கு தண்ணீரை பிடித்து வைத்து அதில் ஒரு கைப்பிடி அளவு கடல் உப்பு சேர்த்து அந்த நீரில் 15 நிமிடங்கள் குளிக்கும் போது, கெட்ட சக்திகள்  நீங்குவதை நீங்களே உணர முடியும்.
 
சிறிதளவு வெண்கடுகை போட்டு புகையிட்டு வீட்டில் அனைத்து அறைகளிலும் எடுத்துச் சென்று அந்தப் புகையை வீடு எங்கும் பரவவிட்டு வந்து சுவாமி அறையில் வைத்து விட வேண்டும். வீட்டில் அந்நாள் வரை இல்லாத மன அமைதி ஏற்பட்டு மெல்ல மெல்ல அதிகமாவதை காணலாம்.
 
நமது வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளை வெளியேற்ற, ஒரு எலுமிச்சையை 4 பகுதிகளாக வெட்டி, அதை உப்பு பரப்பிய ஒரு தட்டின் நடுவே வைத்து, அதை நாம்  படுக்கும் கட்டிலுக்கு அடியில் வைக்க வேண்டும். மறுநாள் காலையில் அந்த எலுமிச்சையை கையால் தொடாமல், ஒரு பிளாஸ்டிக் கவரில் உப்புடன் சேர்த்து  போட்டு அதை அப்படியே தூக்கி எறிந்து விட வேண்டும்.
 
பிள்ளையாருக்கு போட்ட அருகம்புல் மாலையை மறுநாள் வீட்டுக்கு எடுத்து வந்து சில நாட்கள் வீட்டில் வைக்கவும். பின் அருகம்புல் மாலை காய்ந்தவுடன் அதைக்  கட்டியிருக்கும் வாழை நாரை நீக்கிவிட்டு, அருகம்புல்லை இடித்து தூள் ஆக்கவும். இந்த தூளை சாம்பிராணியுடன் கலந்து அதிகாலை மற்றும் இரவு நேரங்களில்  வீட்டில் தூபம் காட்ட, வீட்டில் உள்ள தீய சக்திகள் வெளியேறும். இது ஓர் அதிக செலவில்லாத பரிகாரம். ஆனால் பலனோ அபரீதமானது.

Sunday, March 29, 2020

வாரம் இருமுறை பப்பாளிபழம் சாப்பிட்டு வந்தால் உண்டாகும் நன்மைகள்...!!

வாரம் இருமுறை பப்பாளிபழம் சாப்பிட்டு வந்தால் உண்டாகும் நன்மைகள்...!!

Pappali fruit

பப்பாளி இலை, பப்பாளி காய், பப்பாளி பழம் என அனைத்து பாகங்களும் நமக்கு பயனுள்ளதாக இருக்கிறது. கண்களில் உண்டாகும் பாதிப்புகளை சரி செய்ய பப்பாளி பழம் மிகவும் பயன்படுகிறது.

பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அவர்களின் உடல் வளர்ச்சியில் நல்ல மாற்றம் உண்டாகும். பப்பாளி எலும்புகளை வலுப்படுத்துகிறது. 
 
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வரம் ஒரு முறை பப்பாளி காயை சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைந்து நல்ல உடல் ஆரோக்கியத்தை  பெற முடியும்.
 
நரம்பு தளர்ச்சி பிரச்னையை போக்க தினமும் காலையில் நன்கு பழுத்த பப்பாளி பழத்தை தேனில் தோய்த்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குறைபாடு  சீக்கிரத்திலேயே நீங்கும்.
 
பப்பாளி பழம் ஆண்களின் உடலில் உயிரணுக்களை பெருக்கும் திறன் கொண்டதாகும். இதை சாப்பிடும் ஆண்களுக்கு விந்தணுக்கள் பெருக்கம் ஏற்பட்டு  மலட்டுத்தன்மை நீங்கும்.
 
வாரம் இருமுறை பப்பாளி சாப்பிட்டு வந்தால் உடலில் தொற்று நோய் பாதிப்பு ஏற்படாது. மலச்சிக்கல் இருப்பவர்கள் மூலநோய் குறைபாடு உள்ளவர்கள் தினமும்  ஒரு பப்பாளி பழம் சாப்பிட்டு வந்தால் அந்த குறைபாடுகளில் இருந்து விடுபடலாம்.
 
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க பப்பாளி பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும். கல்லீரல் வீக்கம் உள்ளவர்கள் பப்பாளி காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வீக்கம் குறைந்து விடும்.
 
பப்பாளிப் பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி நோய் விரைவில் குணமாகும்.

வெறும் வயிற்றில் நல்லெண்ணெய் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்...!

வெறும் வயிற்றில் நல்லெண்ணெய் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்...!

Sesame Oil

நல்லெண்ணெயை சமையலிலும் சேர்க்கலாம் அல்லது காலையில் வெறும் வயிற்றில் 1 டீஸ்பூன் குடித்தும் வரலாம். இப்போது நல்லெண்ணெயை எடுத்துக் கொள்வதன் மூலம் பெறும் நன்மைகளைப் பற்றிப் பார்ப்போம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, உணவில் நல்லெண்ணெய்யை சேர்க்க தவறாதீர்கள்.

மலச்சிக்கல்: நல்லெண்ணெயை காலையில் வெறும் வயிற்றில் சிறிது குடித்தால், குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.
 
கெட்ட கொழுப்பு: நல்லெண்ணெய்யில் லெசித்தின் என்னும் பொருளும், லினோலிக் என்னும் அமிலமும் இருப்பதால், இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கெட்ட  கொழுப்பைக் கரைத்து(LDL), நல்ல கொழுப்பின் (HDL)அளவை அதிகரிக்கும்.
 
உடலுக்கு குளிர்ச்சி: உடல் சூட்டினால் அவஸ்தைப்படுபவர்கள், நல்லெண்ணெயை சிறிது குடித்தால், உடல் வெப்பம் தணிந்து, உடல் குளிர்ச்சியுடன் இருக்கும்.
 
இரத்த அழுத்தம்: நல்லெண்ணெயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளதால், இவை இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.  குறிப்பாக நல்லெண்ணெய் குடிப்பதால், இரத்த அழுத்த மருந்துகளை நாளடைவில் குறைத்துவிடலாம்.
 
நல்லெண்ணெயில் கால்சியம் மற்றும் ஜிங்க் வளமாக இருப்பதால், தினமும் சிறிது நல்லெண்ணெயை வெறும் வயிற்றில் குடித்தால், ஆஸ்டியோபோரோசிஸ்  என்னும் எலும்புப்புரையின் தாக்கம் குறைந்து, எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும்.
 
மூட்டு வலிகள்: மூட்டு வலிகளால் கஷ்டப்படுபவர்கள், நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதன் மூலமோ அல்லது குடிப்பதன் மூலமோ குணப்படுத்தலாம்.
 
பல் பிரச்சனைகள்: நல்லெண்ணெயில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மையினால், இந்த எண்ணெயைக் தினமும் காலையில் வாயில் சிறிது ஊற்றி, 10 நிமிடம் கொப்பளித்து, வர வேண்டும். இப்படி செய்து வந்தால், பல் வலி, ஈறு பிரச்சனைகள் போன்றவை நீங்கி வாய் ஆரோக்கியம் மேம்படும்.