Friday, October 18, 2019
Tuesday, October 8, 2019
வயிற்றுப் புண்ணை குணமாக்கும் மணத்தக்காளி கீரை...!
வயிற்றுப் புண்ணை குணமாக்கும் மணத்தக்காளி கீரை...!

மணத்தக்காளி இலை சிறிது இனிப்புச்
சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டது. சருமம் தொடர்பான பல நோய்கள்
வராமல் கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்டது. இதில் வைட்டமின் இ, டி அதிக அளவில்
உள்ளதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மணத்தக்காளிக் கீரையைச் சமைத்துச்
சாப்பிட்டு வந்தால், இருமல், இளைப்பு பிரச்னை குணமாகும். வயிற்றுப்போக்கைக்
கட்டுப்படுத்தும் சக்தி மிகுந்தது இந்தக் கீரை. சிறுநீர், வியர்வையைப்
பெருக்கி உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும்.
கருப்பையில் கருவலிமை பெறவும், பிரசவத்தை
எளிமைப்படுத்தவும் இக்கீரை உதவுகிறது. மணத்தக்காளியின் வேர் மலச்சிக்கலை
நீக்கும் மருந்துகளில் சேர்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மணத்தக்காளி இலைச்சாற்றை 35 மி.லி வீதம்
நாள்தோறும் மூன்று வேளைகள் உட்கொண்டுவந்தால், சிறுநீரைப் பெருக்கும்;
உடலில் நீர் கோத்து ஏற்படும் வீக்கம், உடல் வெப்பம் ஆகியவற்றைக்
குணப்படுத்தும்.
மணத்தக்காளிக் கீரை வாய்ப்புண்களைக்
குணமாக்கும் அருமருந்து. இதன் பச்சை இலைகளைத் தேவையான அளவு நெய் சேர்த்து
வதக்கி, துவையல் செய்து, சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டுவர வாய்ப்புண்
குணமாகும்.
வெறும் பச்சை இலைகளை, நாள் ஒன்றுக்கு
ஐந்துமுறைகள் நன்றாக மென்று சாற்றை விழுங்கினாலும், வாய்ப்புண் முழுமையாக
குணம் ஆகும். மணத்தக்காளிப் பழம் டானிக் போல மதிப்பு மிகுந்த பழமாகும்.
பேதி மருந்தாக இப்பழத்தைச் சாப்பிடலாம்.
மூட்டுப் பகுதியில் ஏற்படும் வீக்கங்கள்
காரணமாக அவதிப்படுபவர்கள், மணத்தக்காளி இலைகளை வதக்கி, மூட்டுப் பகுதியில்
ஒத்தடம் கொடுத்தால், நல்ல பலன் கிடைக்கும்.
விடாத காய்ச்சலை விரட்டி அடிக்கும் நிலவேம்பு குடிநீர்...!!
விடாத காய்ச்சலை விரட்டி அடிக்கும் நிலவேம்பு குடிநீர்...!!

தற்போது சிக்குன் குனியா, டெங்கு
என்பதுபோன்ற பல பெயர்களில் நவீன மருத்துவத்தில் குறிப்பிடுகிறார்கள்.
அத்தகைய விஷக் காய்ச்சல்களைக் குணப்படுத்தும் நோக்கில் கஷாய வடிவில்
கொடுக்கப்படுவதுதான் இந்த 'நிலவேம்புக் குடிநீர்'.
நிலவேம்பு, வெட்டிவேர், விலாமிச்சை வேர்,
சந்தனம், கோரைக்கிழங்கு (கோரைப்புல்லின் கிழங்கு), பேய்ப்புடல் (புடலங்காய்
வகைத் தாவரம்), பற்படாகம் (ஒரு புல் வகையைச் சேர்ந்தது), சுக்கு, மிளகு
ஆகியவற்றின் கலவையே நிலவேம்புக் குடிநீர் தயாரிப்பதற்கான
மூலப்பொருள்களாகும்.
தயாரிக்கும் முறை:
இந்த மூலப்பொருள்கள் ஒவ்வொன்றையும் சம அளவு
எடுத்துக் கொள்ள வேண்டும். ஆயுர்வேதத்தில் கஷாயம் தயாரிக்கும்போதும்
தயாரிக்கக்கூடிய மூலப்பொருள்களின் தன்மை மற்றும் தரத்தைப் பொறுத்து,
அதனுடன் நான்கு அல்லது எட்டு அல்லது 16 மடங்கு என சூரணம் அதனுடன் தண்ணீர்
சேர்க்கப்படும். அதன்படி நிலவேம்புக் குடிநீர் தயாரிக்கப்
பயன்படுத்தப்படும் மூலப்பொருள்களுடன் 8 மடங்கு தண்ணீர் சேர்த்து, அதை 4
மடங்காக வற்றும்வரை கொதிக்க வைக்கவேண்டும். பின்னர் ஆற வைத்து வடிகட்டினால்
நிலவேம்புக் குடிநீர் தயார்.
நிலவேம்புக் குடிநீரை, இளஞ்சூடாக
குடிப்பதுதான் சிறந்தது. அதுவும் தயாரித்த 3 மணி நேரத்துக்குள் குடித்து
விட வேண்டும். நேரம் செல்லச் செல்ல, அதன் வீரியம் குறைந்து விடும்.
அதேபோல, முதல் நாள் தயார் செய்த நிலவேம்புக் குடிநீரை, அடுத்த நாள்வரை
வைத்துக் கண்டிப்பாகக் குடிக்கக் கூடாது.குளிர்சாதனப் பெட்டிகளில் வைத்தும்
பயன்படுத்தக்கூடாது.
நிலவேம்புக் குடிநீரை ஒரு நாளைக்கு 10
மி.லி முதல் 50 மி.லி வரை அருந்தலாம். இதில் குழந்தைகள் 10 மி.லி
சிறுவர்கள் 15 மி.லி பெரியவர்கள் 15-ல் இருந்து 50 மி.லி வரை
குடிக்கலாம். காய்ச்சல் பாதித்தவர் ஒரு நாளைக்கு மூன்று தடவை குடிக்கலாம்.
நிலவேம்புக் குடிநீரை, எப்போதும் சாப்பாட்டுக்கு முன் குடிப்பதுதான்
சிறந்தது. அப்போதுதான். அதை முழுமையாக உடல் உட்கிரகித்துக் கொள்ளும்.
மருத்துவக் குணங்கள்:
இதில் உள்ள வேதிப்பொருள்கள் காய்ச்சல் தீர்ப்பதுடன் வைரஸ் கிருமிகளை அழிக்கும் ஆன்டிபயாடிக் தன்மையையும் கொண்டது. கோரைக்கிழங்கு,
பற்படாகம் ஆகியவை காய்ச்சல் தீர்க்கும் சிறந்த மருந்தாகும். பேய்ப்புடல்
குடலில் தங்கியுள்ள மாசுக்களை வெளியேற்றும். சுக்கு, மிளகு ஆகியவை உடலின்
நொதிகள் மற்றும் என்சைம்களின் சுரப்பைச் சீராக்கும்.
உடல் எடையையும் விரைவில் குறைக்க உதவும் வாழைத்தண்டு...!!
உடல் எடையையும் விரைவில் குறைக்க உதவும் வாழைத்தண்டு...!!

வாழைத்தண்டில் நார்ச்சத்து
அளவுக்கு அதிகமாக இருப்பதால், எடையைக் குறைக்க நினைப்போர் வாழைத்தண்டு ஜூஸை
காலையில் தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், நீண்ட நேரம் பசி
எடுக்காமல் இருப்பதோடு, உடல் எடையையும் விரைவில் குறையும்.
சிறுநீரக கற்கள் வராமல் இருக்கவும்,
இருக்கும் சிறுநீரக கற்கள் விரைவில் கரையவும், குறைந்தது வாரத்திற்கு ஒரு
முறையாவது வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க வேண்டும்.
இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம்
சுரக்க நேர்ந்தால், நெஞ்செரிச்சல் ஏற்படும். இதனை சரிசெய்ய வெறும்
வயிற்றில் வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க வேண்டும்
மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள்,
நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை உட்கொள்வதன் மூலம்,
மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம். அதிலும் வாழைத்தண்டு ஜூஸ் குடித்தால்,
மலச்சிக்கல் உடனே குணமாகும்.
வாழைத்தண்டு ஜூஸ் செய்முறை:
மிக்ஸியில் வாழைத்தண்டை போட்டு, அதில்
உப்பு, மிளகு, வறுத்த சீரகம் மற்றும் பிரஷ்ஷான தயிர் சேர்த்து நன்கு
அரைத்து, பின் அதில் தேவையான அளவு நீரை ஊற்றி வடிகட்டினால், வாழைத்தண்டு
ஜூஸ் தயார்.
Wednesday, October 2, 2019
சளியினால் ஏற்படும் தொல்லையை கட்டுக்குள் வைக்கும் கற்பூரவள்ளி...!
சளியினால் ஏற்படும் தொல்லையை கட்டுக்குள் வைக்கும் கற்பூரவள்ளி...!

கற்பூரவல்லி இலைகள் கசப்புச்
சுவையும் காரத்தன்மையும் வாசனையும் இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும்.
இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது. கற்பூரவல்லியின் தண்டும்,
இலைகளும் பயன்தரக்கூடியவை. கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி,
ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு முக்கிய மருந்து.
கற்பூரவல்லி இலைகள் கார்ப்புச் சுவையும்,
வெப்பத் தன்மையும் கொண்டவை. உடல் வெப்பத்தை அதிகரிக்கும்; வியர்வையை
அதிகமாக்கும்; கோழையகற்றும்.
மருத்துவ துறையில் இது நரம்புகளுக்குச்
சத்து மருந்தாகிறது. மனக் கோளாறுகளைச் சரிசெய்யும். சிறுநீரை எளிதில்
வெளிக் கொணரவும் பரிந்துரைக்கப்படுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தும்
தாவரமாகவும் கருதப்படுகிறது.
இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க
இருமல், சளிக் காச்சல் போகும். இதன் இலைகளை எடுத்து கழுவி சாறெடுத்து
இரண்டு மி.லி சாருடன் எட்டு மி.லி தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து
வந்தால் மார்பு சளி கட்டுக்குள் வரும்.
கற்பூரவல்லி இலை, தூதுவளை, வல்லாரை, இவற்றை
சம அளவு எடுத்து பொடியாக்கி அதில் 1 ஸ்பூன் அளவு எடுத்து 100 மி.லி
தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து 50 மி.லியாக சுண்டக் காய்ச்சி, அதனுடன்
சிறிது பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால், நுரையீரல் பாதிப்பு
நீங்கும். மூச்சுக்குழல் அடைப்பு சீராகும்.
கற்பூரவல்லி சாறு எடுத்து அதனுடன் தேன்
கலந்து காலை வேளையில் அருந்தி வந்தால் மூக்கில் நீர்வடிதல், சளி, இருமல்,
தொண்டைக் கட்டு தொண்டைக் கம்மல் குணமாகும்.
இலையின் சாறு முழுமையாக நீரில் இறங்கி
தண்ணீர் லேசாக பச்சை நிறத்தை அடைந்து இருக்கும். அந்த நீரை மட்டும் குழந்தை
பருகுவதற்குக் கொடுங்கள். 2 அல்லது 3 நாட்களுக்கு இதுபோன்ற நீரையே
கொடுத்து வாருங்கள். குழந்தைக்கு சளியின் தீவிரம் கட்டுப்படும்.
சிலருக்கு வறட்டு இருமல் இருமும் போது
நெஞ்சுப்பகுதி அதிகமாக வலியெடுக்கும். இதனைத் தடுக்கவும் ஓமவல்லி
பயன்படுகிறது. ஒரு கொத்து ஓமவல்லி இலைகளை எடுத்து அரைத்து சாறு எடுத்துக்
கொள்ளுங்கள். அதனுடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வறட்டு
இருமல் கட்டுப்படுத்தப்படும்.
Subscribe to:
Comments (Atom)